200 அழகிகளுடன் பிக்பாஸ் சினேகன் குத்தாட்டம்.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

200 அழகிகளுடன் பிக்பாஸ் சினேகன் குத்தாட்டம்.!

News | செய்திகள்

200 அழகிகளுடன் பிக்பாஸ் சினேகன் குத்தாட்டம்.!

தமிழில் கமல் தொகுத்து வழக்கிய பிக்பாஸ் போட்டியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பரபரப்புடன் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியில் ஆரவ், ஹரிஷ் கல்யாண், சினேகன் மூன்று பேரில், ஆரவ் வெற்றி பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளர் சினேகனே பிக்பாஸ் டைட்டிலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, பிக்பாஸ் வீட்டில் யாருடனும் சண்டை சச்சரவுகள் இல்லாவிட்டாலும், சில சர்ச்சைகளின் இவரை பெயர் அடிபட்டது.

snehan

நிகழ்ச்சி முடிந்தது வெளியெ வந்த சினேகன் பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடலாசிரியர் சினேகன், 200 அழகிகளுடன் குத்தாட்டம் போட்ட காட்சி ‘’எவனும் புத்தனில்லை’’ என்ற படத்துக்காக சென்னை, மலேசியாவில் படமாக்கப்பட்டது.

அதிக பொருட் செலவில் தயாராகும் படம் ‘’எவனும் புத்தனில்லை’’. நபிநந்தி, ஷரத் ஆகியோர் காதாநாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகிகளாக நிகாரிகா, சுவாதிகா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

snehan

‘’உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை. ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக, 6000 அடி உயர மலைகிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே, ’’எவனும் புத்தனில்லை’’ படத்தின் கதை.

snehan

இந்த படத்தில் சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.

“எதுவும் தப்பில்லை எவனும் புத்தனில்லை “ என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top