fbpx
Connect with us

Cinemapettai

கடந்த 20 வருடங்களில் தீபாவளிக்கு வெளிவந்து தெறிக்க விட்ட தமிழ்ப் படங்கள்…

News | செய்திகள்

கடந்த 20 வருடங்களில் தீபாவளிக்கு வெளிவந்து தெறிக்க விட்ட தமிழ்ப் படங்கள்…

தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு வெளிவந்து தெறிக்க விட்ட சில படங்களின் லிஸ்ட்தான் இது. நிறைய படங்கள் இவற்றோடு ரிலீஸ் ஆகி இருந்தாலும் தீபாவளி ரேஸில் முதல் இடம் பிடித்த படங்களின் அடிப்படையிலேயே இந்தத் தொகுப்பு. 2016 முதல் 1997 வரைக்குமான திரைப்படங்களுக்குள்ளே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாமா…

2016 கொடி- தனுஷ் டூயல் ரோல். பயங்கரமான அரசியல் படமாக இருக்கும்போல என நம்பி படத்துக்கு போனவர்களுக்கு இந்தப்படம் லைட்டா ஏமாற்றத்தைதான் கொடுத்திருக்கும். ஆனாலும் த்ரிஷா ஏமாற்றவில்லை. அந்த வருடத்தின் தீபாவளியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது கொடி படம்தான்.

kodi movie review

kodi

2015 வேதாளம்- வீரம் படத்துக்கு அடுத்து, அஜித்- சிவா காம்போவில் வந்த 2வது படம். ஆலுமா டோலுமா… என அரங்கத்தை அதிர வைத்துச் சென்றது.

vedhalam

2014 கத்தி- விஜய் மற்றும் முருகதாஸ் காம்போ, துப்பாக்கிக்குப் பிறகு 2வது முறையாக இணைந்து ஐ ஆம் வெயிட்டிங்… சொன்னதுடன், விவசாயப் பிரச்னைகளையும் ப்ளூ பிரின்ட் போட்டுக் காட்டிச் சென்றது இந்த கத்தி.

vijay

2013 ஆரம்பம்- பில்லாவுக்குப் பின் அஜித்- விஷ்ணுவர்தன் கூட்டணியில் மீண்டும் வந்தது. ஆரம்பம்லாம் என்னவோ நல்லாத்தான் இருந்துச்சு… ஆனா…

Tapsee, Ajith in Aata Arambam Movie Stills

2012 துப்பாக்கி- கொஞ்சநாளாக தூங்கிக்கொண்டிருந்த விஜய்யின் கிராஃபை ஓவர் நைட்டில் தூக்கி உட்கார வைத்தது இந்த அதிரடி துப்பாக்கி. விஜய்யை 100 கோடி கிளப்பிலே இணைய வைத்த முதலாவது படமும் இந்தப்படம்தான் என பரபரப்பாக பேசப்பட்டது.

vijay

2011 வேலாயுதம்- திருப்பாச்சிக்குப் பிறகு முழுநேர அண்ணன் தங்கச்சி சென்டிமென்டில் வந்த விஜய் படம். சூப்பர் மேன் டைப் கதைகளிலேயே கொஞ்சம் வித்தியாசமான படம்.

velayutham

2010 மைனா- வில்லனாக நடித்துக்கொண்டிருந்த விதார்த் திடீரென ஹீரோவாக களத்தில் குதிக்க, படம் யாருமே எதிர்பார்த்திடாத அளவுக்கு ஓடியது. இப்போ பாப்புலராக போயிக்கொண்டிருக்கும் ஜிமிக்கு கம்மலுக்கு முன்னாடி இந்த படத்தில் வந்த ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு…ங்கிற பாட்டைத்தான் பலர் பாடிக்கிட்டு இருந்தாங்க.

mynaa

2009 பேராண்மை- ஜெயம் ரவி கேரியரில் அவரால் மறக்க முடியாத படமாக இருக்கும். அதுவரை வழக்கமான படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்த ஜெயம்ரவியை முற்றிலும் மாட்டிக்காட்டியது இந்த பேராண்மை.

JayamRavi

2008 வாரணம் ஆயிரம்- காக்க காக்க படத்துக்குப் பின் சூர்யா- கெளதம் மேனனின் காம்போவில் வந்த படம். கெளதம் மேனனும், சூர்யாவும் கடுமையான உழைப்பை கொட்டி எடுத்திருப்பார்கள். சிக்ஸ் பேக் அதிகமாகப் பேசப்பட்டது இந்தப்படத்திலிருந்துதான்.

varanam ayiram

2007 அழகிய தமிழ் மகன்- விஜய் முதன்முறையாக டூயல் ரோலில் வந்த படம். எதிர்பார்த்த அளவு அந்த படம் போகவில்லையென்றாலும் அந்த தீபாவளியினை அமர்க்களப்படுத்தியது என்னவோ இந்த அழகிய தமிழ் மகன் படம்தான்.

Shriya-and-Vijay

2006 வரலாறு- அஜித் கிராஃபில் ஒரு மாஸ்டர் பீஸ் எனலாம். மூன்று அஜித், வித்தியாச பாத்திரங்கள் என அஜித்துக்கு ரொம்ப நாளுக்குப்பின் ஒரு வெற்றி.

Varalaru

2005 சிவகாசி- திருப்பாச்சி சூப்பர் ஹிட் ஆனதைத்தொடர்ந்து 2வது தடவையாக விஜய்- பேரரசு காம்பினேசனில் வந்தது இந்தப் படம். சிவகாசி பேரைப் போலவே அந்த ஆண்டு தீபாவளியை பட்டாசு ஆக்கியது.

vijay

2004 மன்மதன்- சிம்புவுடைய கிராஃபில் மிக முக்கியமான படம். இன்னைக்கு, ஆங்கிலப்படம் எடுக்கப் போறேன், என்னைய பாக்கணும்னா அங்க வந்து பாருங்க… னு சொல்றாருனா அதுக்கு இந்தப்படம்தான் முக்கியக் காரணம். அவரது இயக்கத்தில் வந்த முதல் படம். யுவனின் இசையில் பாடல்கள் எல்லாம் செம ஹிட்.

Simbu

2003 திருமலை- சாதா விஜய்யை ஆக்‌ஷன் விஜய் ஆக்கியது இந்தப்படம் என்று சொல்லலாம். ஹேய்…. வாழ்க்கை ஒரு வட்டம்டா தோக்குறவன் ஜெயிப்பான், ஜெயிக்கறவன் தோப்பான்…னு விஜய்யின் எவர் ஹிட் பஞ்ச் வந்தது இதுலதான்.

2002 ரமணா- வழக்கமான போலீஸ் பாத்திரத்தில் மட்டுமே நடித்து அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த விஜயகாந்தை அப்படியே வேற லெவலுக்கு கொண்டு போனது இந்தப்படம். லஞ்சத்துக்கு எதிராக தமிழ் சினிமாவில் வந்த படத்திலேயே ரொம்பவும் வித்தியாசமான கதையோடு எடுத்திருந்தார் ஏ.ஆர். முருகதாஸ். இந்தப்படத்தில் கோர்வையான புள்ளி விபரங்கள் சொல்லி புளியைக் கரைத்திருப்பார் நாயகன் விஜயகாந்த்.

ramana

2001 நந்தா- அதுவரை சிவகுமார் பையன் சூர்யா எனச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது சூர்யா அப்பா சிவகுமார் என மாறியதற்கு அவருக்கு அச்சாரம் போட்டுத்தந்தது இந்த இயக்குநர் பாலாவுடைய படம்.

nandha

2000 பிரியமானவளே- படத்துக்கு அக்ரிமென்ட் போடுவாங்க. ஆனா இதிலே படத்துக்குள்ளேயே அக்ரிமென்ட் போட்டு கல்யாணம் பண்ணுவாங்க விஜய்யும், சிம்ரனும்.

vijay

1999 முதல்வன்- என்னான்னு சொல்ல… எப்படிச் சொல்ல… ரஜினி வேண்டாம் என ஜகா வாங்கிக்கொள்ள அந்த வாய்ப்பை செமத்தியாக கைப்பற்றி பின்னி பெடலெடுத்திருப்பார் அர்ஜூன். ஒருநாள் முதல்வர் கான்செப்டை இன்ட்ரோடியூஸ் செய்து வைத்து ஊரெல்லாம் ஷங்கரை திரும்பிப் பார்க்கவைத்த படம். முதல்வன் படத்தில் நாயகன் அர்ஜூன்- வில்லன் ரகுவரன் ஆகியோருக்கு இடையேயான ஒரே ஒரு இன்டர்வியூ காட்சி, இன்றுவரைக்குமே பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது.

mudhalvan

1998 சிம்மராசி- நாட்டாமை ரேஞ்சுக்கு இந்தப் படம் போகலதான். ஆனாலும் அந்த ஆண்டு தீபாவளிக்கு வந்ததுல இதுதான் பேசப்பட்டது. 1997 பொற்காலம்- வழக்கமான சேரனின் கிராமிய டச். இயல்பான கதை. வடிவேலுவையே வேற மாதிரி திரையில் காட்டியிருப்பார் சேரன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top