Tamil Cinema News | சினிமா செய்திகள்
பா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்.. வெளியான ஸ்வீட் தகவல்
Published on

பா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்
இயக்குனர் பா.ரஞ்சித் இதுவரை தளபதி நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தை 20க்கும் அதிகமான முறை பார்த்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
பா.ரஞ்சித் இளம் இயக்குனராக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர். முதல் படமான அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறியப்பட்டார். அதை தொடர்ந்து, கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். படத்திற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அதேவேளையில், தனது அடுத்த பட கதைகளை ரஜினிகாந்த் கேட்டு வந்தார். அவரின் பா.ரஞ்சித்தும் கதை சொல்லினார். அவரின் வேகத்தில் இம்ப்ரஸான ரஜினிகாந்த் படத்திற்கு ஓகே சொன்னார். அப்படி தொடங்கியது தான் கபாலி படம். படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, வர்த்தகம், விமர்சனம் என்கிற இரண்டு வகையிலும் நற்பெயரைப் பெற்றுத்தந்த `கபாலி’ இயக்குநர் இரஞ்சித்துக்கே மீண்டும் படம் தந்தால் என்ன என்று ரஜினி முடிவு செய்தார். இதையடுத்து, ரஜினிகாந்தும், ரஞ்சித்தும் பேச்சுவார்த்தையில் இறங்கினர். அதன்பின்னர் அறிவிக்கப்பட்டதே காலா படம்.
மும்பையை சேர்ந்த தாராவி பகுதியில் நடக்கும் கதை. கிட்டத்தட்ட படம் பார்த்தவர்கள் அனைவரையுமே அதனுள் ஒன்ற செய்தது படத்தை சூப்பர் ஹிட்டாக்கி இருக்கிறது. இதுவரை 150 கோடிக்கும் அதிகமாக படம் வசூல் செய்து இருப்பதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, ரஞ்சித் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் நாயகன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, இப்பட்டியலில் சூர்யா இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாலிவுட்டில் அமீர்கானை வைத்து பா.ரஞ்சித் படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில், காலா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர் உங்களுக்கு ரொம்ப பிடித்த படம் எதுவென கேள்வி எழுப்பினார். சற்றும் யோசிக்காத ரஞ்சித், விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தை இதுவரை 20க்கும் அதிகமான முறை பார்த்து இருப்பதாக தெரிவித்தார். இத்தகவலால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். விஜயின் அடுத்த பட இயக்குனர் ரஞ்சித் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
