பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான்.

இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கியுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வரும் அக்டோபர் 14 அல்லது 15-ல் தேதியும் படம் தீபாவளியிலும் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியான ஒரே மாதத்தில் எமன் படத்தை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.