80-களில் சினிமாவை கலக்கிய 2 நட்சத்திரங்கள்.. மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்த விசு

ஒரு நடிகராக, இயக்குனராக தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் விசு. குடும்ப ஆடியன்ஸை கவரும் வகையிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் திரைப்படங்களை எடுப்பது தான் இவருடைய சிறப்பு.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்திருக்கிறது. அதிலும் விசு சில குறிப்பிட்ட நட்சத்திரங்களை மட்டுமே தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பார். அப்படி விசுவின் படத்தில் நடித்து மட்டுமே பிரபலமான நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.

Also read : 34 வருடத்திற்கு பின் உருவாகும் சம்சாரம் அது மின்சாரம் 2-ம் பாகம்.. விசுவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலம் யார் தெரியுமா.?

அவ்வாறு விசுவின் திரைப்படங்களில் இந்த இரு நடிகைகளுக்கு நிச்சயம் இடம் இருக்கும். 80 காலகட்ட தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த அந்த இரு நடிகைகளுக்கும் விசு தன்னுடைய படங்களில் ஏராளமான வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார். அந்த நடிகைகள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

மாதுரி: சினிமாவில் கிளாமர் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் இந்த மாதுரி. ஆனால் விசு திரைப்படங்களில் இவர் அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்திருப்பார். அந்த வகையில் இவர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம், சகலகலா சம்பந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோன்று விசு திரைப்படங்கள் என்றால் இவருக்கு நிச்சயம் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

Also read : எம்ஜிஆர் எச்சரித்தும் கேட்காத 4 நடிகர்கள்.. கோபப்பட்டு ஒதுக்கி வைத்த ஹீரோ

ரஞ்சனி: முதல் மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 80 காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோன்று விசுவின் எல்லாமே என் தங்கச்சி, சகலகலா சம்மந்தி போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஒரு வகையில் இவர் பார்ப்பதற்கு நடிகை மாதுரியின் சாயலிலும் இருப்பார்.

இப்படி விசு இந்த இரு நடிகைகளுக்கும் தன்னுடைய திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். ஆனாலும் இந்த இரண்டு நடிகைகளும் ஒரு காலத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினர். அதிலும் மாதுரியின் மீது ஏகப்பட்ட சர்ச்சைகளும், புகார்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Also read : சுந்தர் சி இயக்கிய 35 படங்களில் நடித்த ஒரே நடிகர்.. 2 படங்களை மட்டும் மிஸ் செய்த காரணம் இதுதான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்