Connect with us

Videos | வீடியோக்கள்

2 ஸ்கிரீன், 2 கதை வியக்க வைத்த பிகினிங் ட்ரெய்லர்.. அனல் பறக்கும் விமர்சனம்

ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்க்ரீன் திரைப்படம் என்ற பெருமையோடு பிகினிங் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

vinoth-gowri-beginning

ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை பார்த்து போர் அடித்த மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் தற்போது வித்தியாசமான முறையில் திரைப்படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. புதுப்புது தொழில்நுட்பங்கள், வித்தியாசமான முயற்சி என தற்போது இயக்குனர்கள் வேற லெவல் திரைப்படங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

அந்த வகையில் ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்க்ரீன் திரைப்படம் என்ற பெருமையோடு பிகினிங் திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஜெகன் விஜயா இயக்கத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: செம்பியாக ரீ-என்ட்ரி கொடுத்த கோவை சரளா.. தேசிய விருது கன்பார்ம், மிரள வைக்கும் ட்ரெய்லர்

ஏனென்றால் இந்தத் திரைப்படம் இரண்டு ஸ்கிரீன், இரண்டு கதை கொண்ட வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்டிருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்கிரீன் திரைப்படம் என்ற அறிமுகத்தோடு ஆரம்பமாகிறது. அதைத்தொடர்ந்து ஒரு கதையில் ரோகிணி மற்றும் வினோத் இருவரும் காட்டப்படுகிறார்கள்.

அம்மா, மகன் இருவரின் வாழ்க்கையைப் பற்றி அதில் காட்டப்படுகிறது. நந்தா, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வினோத் இந்த படத்தில் திக்குவாய் மனிதராகவும், மனவளர்ச்சி குன்றியவராகவும் நடித்திருக்கிறார். இதுவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து மற்றொரு கதையில் கௌரி சில நபர்களால் கடத்தப்படுவது போலவும் அங்கிருந்து அவர் தப்பிக்க முயல்வது போலவும் காட்டப்படுகிறது.

Also read: அவார்டு, வசூல் என அள்ளி குவித்த இரவின் நிழல்.. ஆனாலும் சூடுபட்டு விட்டேன் என புலம்பிய பார்த்திபன்

இதை பார்க்கும் போது இந்த இரண்டு கதைகளும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இணையும் என்று தெரிகிறது. இவ்வாறு வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்திய சினிமாவின் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் வேற லெவல் வரவேற்பை பெறும் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Continue Reading
To Top