Reviews | விமர்சனங்கள்
2.O திரை விமர்சனம்.. ஷங்கரின் பிரம்மாண்டம் திரையிலா? கதையிலா?
2.O திரை விமர்சனம்
2.O படத்தை பிரம்மாண்டமாக எடுத்த ஷங்கர் உண்மையில் படத்தின் பிரம்மாண்டத்தை காமித்தாரா அல்லது வழக்கம்போல் கதையில் கோட்டை விட்டு பிரம்மாண்டத்தை மட்டும் நம்பி இருக்கிறாரா என்றால் ஆம் இந்த முறையும் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி உள்ளார். ஹாலிவுட் மாதிரி படம் எடுக்கிறேன் என்றால் கதையும் சுவாரசியமும் அதைப்போலவே இருக்க வேண்டும்.
அவர்கள் டெக்னாலஜி வைத்து படம் எடுத்தாலும், அனிமேஷன் படமாக எடுத்தாலும் நடிப்பிலும் கதையிலும் உண்மை படம் போலவே இருக்கும். அவர்கள் ஹீரோவாக வைத்து நடிக்கும் மெஷின் கூட அழுதால் பார்பவர்களுக்கும் அழுகை வரும், சிரித்தால் நம்மையும் சிரிக்க வைக்கும். அதெல்லாம் சிச்சுவேஷன் பொறுத்து உள்ளது. ஆனால் இதில் அப்படி எதுவும் சீனே இல்லை. அப்படியே வெறிக்க வெறிக்க விஷுவல் பார்த்துட்டு இருக்கலாம்.
டார்க் நெட் போன்ற படமாக இருந்தாலும்,அயன் மேன் போன்ற படமாக இருந்தாலும் பிரம்மாண்டத்தை கதை, இசை, செண்டிமெண்ட் என அனைத்திலும் வைத்திருப்பார்கள். சில உணர்ச்சிபூர்வமான சீன்களில் நமக்கே உணர்ச்சி பொங்கும் அளவிற்கு படத்தில்,கதையில் விஷயம் இருக்கும். ஆனால் சங்கர் ரஜினியை வைத்து திருப்தியாக படம் எடுத்தாரா என்றால்? இல்லை, அவரை வைத்து எடுத்து முடித்தால் போதும் என்பது போல்தான் இருந்தது.
கண்டிப்பாக படம் போரடிக்கவில்லை ஆனால் தேவையில்லாத கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. கதை திரைக்கதைக்கு தேவைப்படாத காட்சிகளில் டெக்னாலஜி காமித்து என்ன பிரயோஜனம்.
இரண்டாம் பாதியில் படம் நன்றாக சென்றது காரணம் அக்ஷய் குமார். அவர் ரோபோவாக மட்டும் வருவார் என்று பார்த்தால் முக்கியமான கதாபாத்திரத்தில் வந்து நடித்திருப்பார். உண்மையில் அந்த இடத்தில் சங்கரை பாராட்ட வேண்டும். இரண்டாம் பாதியில் அற்புதமாக நடித்திருந்தார் அக்ஷய் குமார். அவருடைய மேக்கப் அவ்வளவு அற்புதமாக இருந்தது. அவருடைய நடிப்பும் சரி நம்ம ஊர் நடிகர் போலவே இருந்தது. அடுத்த படம் தமிழில் தனி ஹீரோவாக நடித்தாலும் தமிழில் ஆதரவு கிடக்கும்.

2.o-trailer-rajini-trailers
எமி ஜாக்சன் கதாபாத்திரம் நன்றாக இருந்தது நன்றாக நடித்திருக்கிறார். நல்லவேளை பாடல்கள் படத்தில் இல்லை ஒரு சிறு பாடலை தவிர, படம் முடிந்த பின்பு மட்டுமே ஒரு பாடல் வரும். ஏ.ஆர்.ரகுமான் இசை Instrumental -இல் மட்டுமே பிரம்மாண்டமாய் இருந்தது ஆனால் மனதில் பதியவில்லை. முதல் பாகத்தில் வில்லன் ரோபோவுக்கு ஒரு மியூசிக் மனதில் பதியும். அப்படிப்பட்ட எந்த தனித்துவமான இசையும் இந்தப் பாகத்தில் இல்லை.
இறுதியாக சங்கரின் காதலன், ஜென்டில்மேன், இந்தியன் போன்ற படங்கள் மிகப்பெரிய பட்ஜெட் இல்லாமல் பிரம்மாண்டமாக தெரியும். ஏனென்றால் அந்த படங்களின் கதை திரைக்கதை என அனைத்தும் மிக அழுத்தமாக இருக்கும். இசையும் ஏ.ஆர்.ரகுமான் மனதில் பதிய வைப்பது போல் அமைத்திருப்பார். ஆனால் இரண்டு பேரும் பழைய டெக்னாலஜியை விட்டு புது டெக்னாலஜிக்கு மாறும்பொழுது, இதுக்கு பழைய டெக்னாலஜியே நன்றாகத்தான் இருந்தது என்பது போல் உள்ளது. படத்தின் டெக்னாலஜிகள் விஷுவல் மற்றும் சப்தத்தில் மட்டும்தான் இருக்கிறது கதையில் இல்லை.

2.o-trailer-amy-jackson
ஆனால் தமிழ் சினிமாவிற்கு கண்டிப்பாக பெருமை சேர்த்துள்ளார்கள். படத்தின் பெயர் போடுவதிலிருந்து 3D காட்சிகள் அனைத்தும் மிக அழகாக இருந்தது. ஹாலிவுட் படம் பார்த்த மாதிரிதான் இருந்தது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் ஏன் என்றால் நம்ம ஊர்காரரும் ஒரு பெரிய முயற்சி செய்திருக்கிறார். கொஞ்சம் பணம் உள்ளவர்கள் நல்ல தியேட்டரில் படம் பார்த்து அனுபவிக்கலாம். நன்றாக இருக்கும். இந்த தமிழ் ராக்கர்ஸ் ஆளுங்க, 2D ஆளுங்க நிலைமைதான் பாவம். கண்டிப்பாக தமிழ் ராக்கர்ஸ்-ஆல் பெரிய அளவு பாதிப்பு வராது.
Rating: 3.5/5
