Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்

கமலின் வெற்றி பட இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா தனது காதலியை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட்டில் ஆஷிக்கு பானாயா, தூம் தூம் உள்ளிட்ட பாடல்கள் மூலம் பிரபலமானவர் ஹிமேஷ் ரேஷ்மியா. பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி கண்டவர். பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் பொம்மலாட்டம், தசாவதாரம் படங்களுக்கு இசையமைத்தார். இவருக்கும் கோமல் என்பவருக்கும் கடந்த 1994ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளான். எப்போதும் போல இத்தம்பதிக்கு ஒரு கருத்து வேறுபாடு உருவானது. அதை தொடர்ந்து இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதன்படி, கடந்த வருடம் ஜூன் மாதம் நீதிமன்றத்தில் முறையாக விவகாரத்து பெற்றுக்கொண்டனர். அப்போது, ஹிமேஷ் ரேஷ்மியாவிற்கும் டிவி நடிகை சோனியா கபூருக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இரு தரப்பும் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஹிமேஷ் மற்றும் சோனியா இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட்டது. நீங்கள் எவ்வளவு வேணாலும் பேசுங்க நாங்க அமைதி தான் என்பது போல இருவரும் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு திடீரென்று தனது காதலி சோனியா கபூரை மும்பையில் ரகசிய திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் திருமணம் அவர்கள் வீட்டிலே வெகு சில பேரை மட்டுமே அழைத்து நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த அவசரத்திற்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top