வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

2 லட்சம் கழுதைகள்.. பாகிஸ்தானுக்கு ஆர்டர் போட்டு டீலை ஓகே செய்த நாடு! எதுக்கு தெரியுமா?

பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான கழுதைகளை சீனா இறக்குமதி செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கு ரஷ்யாவுக்கு இணையான வர்த்தகத்தையும் ராணுவப் பலத்தையும் கொண்டிருக்கும் நாடு சீனா. உலகில் பல நாடுகளுக்கு இறக்குமதியாகும் எலக்டரானிக் பொருட்கள், செல்போன், பேட்டரிகள், விளையாட்டுப் பொருட்கள் என அனைத்திலும் மேட் இன் சீனா என எழுதியிருக்கும்.

அந்தளவுக்கு அனைத்துத் துறைகளிலும் தயாரிப்புகளிலும் முன்னோடியாக இருக்கிறது. சர்வதேச மார்க்கெட்டிலும் சீனாவுக்கு என தனித்த மதிப்பு நிலவிவருகிறது. இந்த நிலையில், தற்போது, இஸ்ரேல்- பாலஸ்தீன போர், ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வருவது 3 ஆம் உலகப் போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் பரவி வருகிறது.

இதனால், பெரும்பாலான உலக நாடுகள் பிற நாடுகளுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன. அதன்படி, ஒரு நாடு மற்ற நாட்டுடன் உறவும், கூட்டணியும் வைத்து சமூகமாக இருக்கின்றபோது, அந்த இரு நடுகள் இடையே வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை அதிகரிப்பதுடன் நாட்டின் பொருளாதார மதிப்பும், உற்பத்தியும் அதிகரிக்கும் இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு உதவும் சீனா

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எப்போதும் ஆதரவு நாடாகவே பார்க்கப்படும் சீனா, அந்த நாட்டில் இருந்து வருடம் தோறும் 2 லட்சம் கழுதைகளில் இருந்து இறைச்சி மற்றும் தோல்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் அதிகார் ஒருவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் இருந்து கழுதைகளி இறைச்சி இறக்குமதி தொடர்பான ஒப்பந்ததை உறுதிப்படுத்தினார். இந்த ஒப்பந்ததின்படி, இனி ஆண்டுதோறும் 2,16,000 கழுதை தோல்கள், அதன் இறைச்சியை வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானில் தற்போது 5.2 மில்லியன் கழுதைகள் இருக்கும் நிலையில், இது உலகின் 3வது பெரிய எண்ணிக்கை எனவும், கடந்த ஆட்சியில் இருந்து பாகிதானில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சீனாவுடனான இந்த ஒப்பந்தம் உதவும், பிரச்சனைக்கு தீர்வாகவும் அமையும் எனவும், வருமானமும் ஈட்ட வழிவழிக்கும் எனக் கூறப்படுகிறது.

எதற்காக இந்தக் கழுதைகள்?

சீனாவில் எஜியாவோ என்ற பாரம்பரிய மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு கழுதை தோல்கள் தேவைப்படும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து கழுதைகள் ஏற்றுமதி செய்ய சீனா முடிவெடுத்துள்ளாது. அதன்படி, பாகிஸ்தானின் கால் நடைகள், பொருளாதாரத்திலும் இது பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News