இந்த ஆண்டு சந்துல சிந்து பாடிய 2 படங்கள்.. விஜய், அஜித் இயக்குனர்கள் இதை பார்த்து கத்துக்கோங்க!

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட அஜித்தோட வலிமை, விஜய்யோட பீஸ்ட் திரைப்படங்கள், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனாலும் நாம் எதிர்பார்க்காத 2 படங்கள் இந்த ரெண்டு படத்தையும் தூக்கி சாப்பிட்டது .

இந்த ரெண்டு படத்தோட கதை களமும் வேற வேற, இதற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. தற்போது ஒடிடியில் இந்த 2 திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது . பெரிய பட்ஜெட் நட்சத்திர நடிகர்கள் இல்லாம சாதாரணமான கதை களமாக உருவாக்கப்பட்டு தற்போது வெற்றி நடைபோட்டு வருகிறது.

டாணாக்காரன்: நாயகன் விக்ரம் பிரபு, நாயகி அஞ்சலி நாயர் நடிப்பில் இந்தத் திரைப்படம் 1997 போலீஸ் பணியின் போது நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் . போலீஸ் பயிற்சியில், அங்கு நடக்கும் பரைடு பற்றிய உண்மை, பல வித பிரச்சினைகள், இடைஞ்சல்கள் போராட்டங்களைத் தாண்டி ஒரு இளைஞன் எப்படி தன்னுடைய லட்சியமான போலீஸ் வேலையை அடைந்தான் என்பதுதான் இந்த படத்தோட முழு கதை.

சாணி காயிதம்:  தமிழ் சினிமாவில் காலங்காலமாக கட்டப்பட்டு வரும் அதே பழிவாங்கும் கதை களம் கொண்டது.  இத்திரைப்படத்தில் பொன்னி என்ற கதாபாத்திரத்தை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், அவர் நடிப்பு வெகுவாக பாராட்டப்படுகிறது. அண்ணன் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்திருக்கிறார். இது இவரது முதல் திரைப்படமாகும் ஆனால் சில பிரச்சினைகளால் இத்திரைப்படம் காலதாமதமாக வெளியாகி உள்ளது .

வலிமை, பீஸ்ட் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் பெறாத விமர்சனத்தை இந்த 2 படங்களும் பெற்று 2022 ரேசில் முதலாவதாக இருக்கிறது. இவ்விரு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் தியேட்டரில் ரிலீசாகாமல் இரண்டு படங்களும் ஒடிடியில் ரிலீஸ் ஆகியது தான் இந்த படங்களை பின்னடைவாக பார்க்கப்படுகிற துரதிர்ஷ்டம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தோட வலிமை, விஜய்யோடு பீஸ்ட்  திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சந்தில் சிந்து பாடியது இந்த 2 படங்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்