எம்ஜிஆரை இழிவுப்படுத்திய 2 படங்கள்.. வாய்ப்பே வேண்டாம் என உதறிய விசுவாசமான நடிகர்

நடிகரும், சிறந்த அரசியல் தலைவருமாக இருந்த எம்ஜிஆருக்கு இப்போதும் மக்கள் மனதில் ஒரு தனி இடம் இருக்கிறது. அந்த கால சினிமாவை ஆட்சி செய்த அவருடைய புகழை போற்றும் வகையில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அதே சமயம் அவருடைய வாழ்க்கை பற்றிய சில சர்ச்சை கருத்துக்களை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வந்திருக்கிறது.

அப்படி அவரை இழிவுபடுத்தி விட்டதாக கூறி சில சர்ச்சைகளை சந்தித்த திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன், பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அந்த திரைப்படம் கடந்த வருடம் அமேசான் பிரைமில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற அந்தத் திரைப்படம் சில பல பிரச்சனைகளையும் சந்தித்தது.

Also read: எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே சினிமாவை ஆட்சி செய்த 2 ஜாம்பவான்கள்.. 70-களில் கலக்கிய சூப்பர் ஹீரோஸ்

எம்ஜிஆர் உடைய விசுவாசிகள் அந்த படத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனாலும் இயக்குனர் அதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் பசுபதி கேரக்டருக்கு நடிகர் சத்யராஜை தான் முதலில் கேட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

ஏனென்றால் அதில் எம் ஜி ஆருக்கு எதிராக வசனங்களை பேச வேண்டும் என்பதுதான் முக்கிய காரணம். சத்யராஜ் எம்ஜிஆர் உடைய தீவிர ரசிகர் என்பது அனைவருக்குமே தெரியும். அதனாலேயே அவர் பல திரைப்படங்களில் எம்ஜிஆரை போற்றும் வகையில் நடித்திருக்கிறார். அதனால்தான் அவர் சார்பட்டா பரம்பரை வாய்ப்பை வேண்டாம் என மறுத்திருக்கிறார்.

Also read: அரை டஜன் பொண்டாட்டி, ஒரு டஜன் பிள்ளைகள்.. ராஜ வாழ்க்கை வாழ்ந்த எம்ஜிஆர் பட முரட்டு வில்லன்

இதேபோன்று இன்னொரு படத்தையும் அவர் உதறி தள்ளி இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் இருவர். மோகன்லால், பிரகாஷ்ராஜ், தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் முதலில் சத்யராஜை தான் நடிக்க அணுகி இருக்கிறார்கள்.

ஆனால் அவர் அந்த வாய்ப்பையும் வேண்டாம் என மறுத்திருக்கிறார். ஏனென்றால் அந்த திரைப்படம் எம்ஜிஆர் மற்றும் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் எம்ஜிஆருக்கு எதிராகவும் சில விஷயங்கள் அதில் கூறப்பட்டிருந்தது. அப்படி ஒரு காரணத்தினால் தான் எம்ஜிஆரின் சிறந்த விசுவாசியான சத்யராஜ் அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பின் வெளிவந்திருக்கும் இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Also read: இமேஜை மாற்ற 2 படங்களில் ஹீரோ வேஷம் போட்ட நம்பியார்.. பழைய ரூட்டுக்கே திருப்பி விட்ட எம்ஜிஆர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்