புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முதல்வர் நாற்காலிக்கு விஜய் போட்ட திட்டம்! தீயாய் வேலை செய்யும் தொண்டர்கள்

சினிமாவில் வசூலிலும், சம்பளத்திலும் உச்ச நடிகராக சாதித்துக் காட்டிய விஜய், அடுத்து அரசியலில் குதிக்கவிருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கட்சிக் கொடியையும் கட்சிப் பாடலையும் அறிவித்தார். தவெகவின் கொடிக்கு அறிமுகப்படுத்த நாள் முதலே சர்ச்சைகள் வெடித்தது. அத்துடன், பகுஜன் சமாஜ் கட்சி தவெகவை விமர்சித்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும் எச்சரித்தது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தவெகவின் முதல் மாநாட்டை நடத்துவதில் விஜய் குறியாக இருந்தார். பல தடைகள் இருந்தபோதிலும் நாள்கள் தள்ளிப் போனாலும் கூட சொன்னபடி அக்டோபர் 27 ஆம் தேதி தன் முதல் மாநாட்டை வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நடத்திக் காட்டினார் விஜய்.

முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி, தவெகவும் பெரிய கட்சி என்ற பிம்பத்தை மக்கள் மனதில் விதைத்து, திராவிட கட்சிகளுக்கும், மற்ற கட்சிகளுக்கும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்திய விஜய் அடுத்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிர்வாகிகளை சந்தித்து தன் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கவுள்ளார்.

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க உத்தரவு

அதேபோல் பல கட்சிகளில் இருந்து தவெகவில் மகளிர், இளைஞர்கள் என பலரும் இணைந்து வரும் நிலையில், தன் கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடிக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார் விஜய்.

மற்ற கட்சிகளில் அதிகாரப்பூர்வ உறுப்பினர் எண்ணிக்கையை விட தவெகவில் அதிகளவில் உறுப்பினர் இருக்க வேண்டும் எனவும், இதுதான் வரும் 2026 தேர்தலில் கட்சியின் வெற்றிக்கும் வாக்கு சதவீதத்துக்கும் வழிவகுக்கும் என விஜய் திட்டமிட்டிருப்பதாகவும், ஒரு வேலை தனது தலைமையில் பிற கட்சிகள் உடனான கூட்டணிக்கு ஒப்புக் கொண்டால், அதுபற்றி பரிசீலிக்கவும் அவர் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகிறது. இதற்காக தொண்டர்களும் தீயாக உழைக்க தயாராகி வருகின்றனர்.


- Advertisement -

Trending News