செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிக்பாஸ் வீட்டில் காத்துவாக்குல ரெண்டு காதல்.. விஷாலை காதலிக்கும் 2 பெண் போட்டியாளர்கள்!

Bigg Boss 8: பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் கண்டண்டு இல்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். சீசனுக்கு சீசன் காதல் கன்டென்ட் கொடுப்பதற்கு என்றே ஜோடிகள் பறந்து வந்து விடுவார்கள். ஓவியா ஆரம்பித்து வைத்த இந்த காதல் கதை இந்த சீசன் வரை தொடர்ந்து வருகிறது.

பிக் பாஸ் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ஆரம்பித்தது. என்ன இதுவரை காதல் காட்சிகள் இல்லாமலே ஓடிக்கொண்டிருக்கிறது என்று எதிர்பார்த்தவர்களுக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை ஓட்டுவதற்கே கண்டன்டு கிடைத்திருக்கிறது.

விஷாலை காதலிக்கும் 2 பெண் போட்டியாளர்கள்!

விஷால் ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள். இதில் பிக் பாஸ் வீட்டுக்குள் கேட்கவா வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. அப்போது விளையாட்டாக விஷால் மற்றும் தர்ஷிகா காதல் கான்செப்ட்டை வைத்து ஓட்டினார்கள்.

அப்போதே அவர்களுக்குள் ஒரு சின்ன நெருக்கம் ஏற்பட்டது. தர்ஷிகா நிஜமாகவே விஷாலை காதலிக்க ஆரம்பித்து விட்டார் போல. விஷால் தர்ஷிகாவிடம் நன்றாக பேசினாலும் தன்னுடைய ஆண் நண்பர்களிடம் அப்படியெல்லாம் என்னுடைய மனதில் எதுவும் கிடையாது என சொல்லி வருகிறார்.

இந்த நிலையில் அன்ஷிதா விஷாலை காதலிக்கிறாரோ என ஆர் ஜே ஆனந்தி மற்றும் பவித்ராவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இதை நேற்று அவரிடமே கேட்டு விட்டார்கள். இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத அன்ஷிதா அழுதுவிட்டார்.

விஷால் எனக்கு ஒரு நல்ல நண்பன், உங்களுக்கு ஏன் நான் அவனை காதலிப்பது போல் தோன்றியது, நான் ஏற்கனவே காதலால் நிறைய அடி வாங்கி விட்டேன் என பேசி இருக்கிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாலும் இன்னொரு பக்கம் தர்ஷிகா பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததே காதலிப்பதற்காக தான் என்பது போல் சுற்றிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் எப்படி எப்படியோ காதலித்த ஜோடிகளெல்லாம் வெளியில் பிரிந்து விட்டார்கள். இந்த காதல் என்ன ஆகிறது என பொருத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News