2.0

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.௦. இந்த படத்தில் ரஜினி, அக்ஷய் குமார் ,எமி ஜாக்சன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.இந்த திரைப்படம் 3D தொழில் நுட்பத்தில் உருவாகிறது.

Shankar-2.0

ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வெளியான முதல் பாகம் “எந்திரன்” பிரமாண்ட வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. முதல் பாகத்தில் பிரித்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட சிட்டி ரோபோ , உலகில் ஏற்படும் ஏலியன் பிரச்சனையை தடுக்க மீண்டும் அசெம்பிள் செய்யப்படும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்த தர்ம யுத்தமே படத்தின் கதை.

2.0
2.0

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் எமி ஜாக்சன் கெட்டப் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரவைத்துள்ளது. 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் புரமோஷனுக்காக வெளியிட்டார்கள். பின்னர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக பிரமாண்டமாக கொண்டாடினார்கள் படக்குழு.

rajini2.0

எனினும் படத்திற்கு கிராபிக்ஸ் செய்யும் வெளிநாட்டு நிறுவனம் சொதப்பியதால் பட ரிலீஸ் பல மாதங்களாக ரிலீஸ் தள்ளிப்போகிறது. மேலும் காலா படத்தினை முன்பே ரிலீஸ் செய்கிறார்கள். இதன் டீஸர் வெளிவந்து ஹிட் ஆகியுள்ளது.

மேலும் குடியரசு தினத்தன்று படத்தின் டீசெர் விரைவில் ரிலீஸ் செய்யவோம் என்று ஷங்கர் டீவீட்டினார். இந்நிலையில் நேற்று முதல் இணையத்தில் 2.0 ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

rajini 2.0
rajini 2.0

எதோ தனியார் சகிரீனிங் செய்யப்பட்ட இடத்தில் தன் செல் போனில் படம் பிடித்து யாரோ ஒரு மர்ம நபர் அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது வெளிநாட்டு விநியோகிஸ்தர்களுக்கு போட்டுக்காட்டப்பட்டதடா அல்லது லைக்கா குழும விழாவில் திரையிடப்பட்டதா போன்ற தகவல்கள் இல்லை. தயரிப்பு தரப்பே பதில் அளிக்க வேண்டும்.

2.0 ட்ரைலர் லிங்க் இதோ ..

ட்விட்டர் மற்றும் வாட்ஸாப்பில் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.