‘எந்திரன்’ படத்துக்குப் பிறகு, மீண்டும் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘2.0.’ எமி ஜாக்ஸன், அக்‌ஷய் குமார் நடிக்கும் இந்தப் படம், அடுத்த வருடம் ஜனவரியில் ரிலீஸாக உள்ளது.

‘2.0.’ படத்தின் பட்ஜெட் செலவு 400 கோடி ரூபாய் என லைகா தெரிவித்துள்ளது. 3D-யில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை
3D-யில் வெளியிடுவதுகுறித்து திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் 2.0. இதன் இசை வெளியீடு கோலாகலமாக இன்று துபாயில் தொடங்குகிறது.

rajini 2.0

துபாயில் இருக்கும் புர்ஜ் அல் அராப்பில் `2.0′ செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ரஜினி, `நிஜ வாழ்க்கையில் நான் சிம்பிளாக இருப்பதற்குக் காரணம், எனக்கு யாரும் பணம் கொடுப்பதில்லை என்பதால்தான்’ என்று கூறினாராம்.

இயக்குநர் ஷங்கர் பேசுகையில், `2.0, இயந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்காது. இது ஒரு தனி திரைப்படமாகத்தான் இருக்கும்’ என்றார்.

rajini-sorry-to-actress-2-0
rajini

பின்னர் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், `2.0 திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கின்றன’ என்றார். நாளை 2.0 திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஷங்கர், “இந்தப் படம் தரும் அனுபவம் புதுசு.

rajini 2.0
rajini 2.0

இதில் உள்ள செய்தியும் புதுசு. இந்த வடிவமே புதுசு. ஆகவே 2.0 இந்தியப் படம் இல்லை. இது ஒரு ஹாலிவுட் படம்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “3 டியில் உருவாகியுள்ள இது பார்வையாளர்களுக்கு கொடுக்க போகிற அனுபவம் வித்தியாசமானது.

இந்தக் கதையை 3டி வடிவில் மட்டுதான் சொல்ல முடிடியும். ஏனென்றால் கதை அப்படி. படத்தை பார்க்கும் போது அதை நீங்களே நிச்சயம் உணருவீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடன் இருந்த நடிகர் அக்‌சய் குமாரோ “நான் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது”என்றார். உடனே குறுக்கிட்ட ஷங்கர் “இது தமிழ்ப் படமல்ல; இந்தியப் படம்” என்றார்.