Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரம்மாண்ட படைப்பான 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா புரொடக்ஷன்ஸ்!

2.0
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.௦. இந்த படத்தில் ரஜினி, அக்ஷய் குமார் ,எமி ஜாக்சன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.இந்த திரைப்படம் 3D தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தில் பிரித்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட சிட்டி ரோபோ , உலகில் ஏற்படும் ஏலியன் பிரச்சனையை தடுக்க மீண்டும் அசெம்பிள் செய்யப்படும் வகையில் கதையை உருவாக்கியுள்ளார் ஷங்கர். மேலும் ரோபோவுக்கு, ஏலியனுக்கும் இடையில் நடக்கும் தர்ம யுத்தமே படத்தின் கதை.
இந்நிலையில் இப்படத்தின் கிராபிக்ஸ் நிறுவனங்கள் சிலர் செய்த குளறுபடி காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது.
இந்நிலையில் அனைத்தும் கம்பெனிகளும் தங்களின் பகுதியை ஒப்படைக்கும் தேதியை தந்துவிட்டனர். எனவே படத்தின் ரிலீஸ் 29 நவமபர் என் ஷங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
