fbpx
Connect with us

Cinemapettai

ஷங்கர் வெளியிட்ட ‘2.0’ படத்தின் எமி ஜாக்சன் வித்தியாசமான கேரக்டர் புகைப்படம்..!

News | செய்திகள்

ஷங்கர் வெளியிட்ட ‘2.0’ படத்தின் எமி ஜாக்சன் வித்தியாசமான கேரக்டர் புகைப்படம்..!

‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கால்ஷீட் டைரியில் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் இருக்கிறது.

இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடி வருகிறார்.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 400 கோடி ரூபாய் செலவில், மெகா பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன. இதனிடையே, இந்தப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிட, படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கிராபிக்ஸ் பணி காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ சில நாட்களுக்கு முன்  வெளியிடப்பட்டுள்ளது. 1.47 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் படம் உருவான விதம் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஏற்கெனவே, தொடங்கப்பட்ட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம்.

சூப்பர் ஸ்டார், எமி கலந்து கொள்ளும் இப்பாடலின் ஷூட்டிங் இன்று (அக்டோபர் 11-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் எமி ஜாக்சனின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தின் இசை வெளியீட்டை அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் மாபெரும் விழாவாக நடத்த  திட்டமிட்டுள்ளனர்.

படத்தை 2018-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ‘3டி’ தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.இதனால் படம் வரும் நாட்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top