திருட்டு இணையதளமான தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்புவைத்த ரஜினியின் 2.0…!!!

கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பரபரப்பாக தயாராகி வரும் படங்கள் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’. இந்த இரண்டு படங்கள் ஆகும்.

இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடி வருகிறார். ரஜினிகாந்துக்கு எதிராக நம்மை மிரட்டும் வில்லன் வேடங்களில் அக்ஷய் குமார், சுதன்ஷு பாண்டே நடிக்கின்றனராம்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மேக்கிங் வீடியோ பார்ட் 1 ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. புரமோஷனுக்காக படத்தின் போஸ்டர்ஸ் பொறிக்கப்பட்ட ஹாட் ஏர் பலூனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் பறக்கவிட்டனர்,rajini-2-0-poster

இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே பேலன்ஸாம். ஏற்கெனவே, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட 450 கோடியை தொட்டுவிட்டது 2.0 படத்தின் பட்ஜெட். பாகுபலி சாதனைகள் முறியும் தேதியை இப்போதே குறித்து விடும் அளவுக்கு 2.0 படக்குழு அதிரடி திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அதே, போல தமிழ் ராக்கர்ஸ் ஆனா திருட்டு வீடியோ தளங்களும் படத்தை வெளியிட முடியாத படியும், அப்படியே வெளியிட்டாலும் தெளிவாக பார்க்க முடியாதபடியும் ஒரு பலே ஐடியாவை கையில் எடுத்துள்ளது.

முதலில் 2.0 படத்தை 2D மற்றும் 3D ஆகிய பதிப்புகளை ஒரே நாளில் திரையரங்கின் தன்மையை பொருத்து வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு.

ஆனால் தற்போது, 2.0 படத்தின் 3D வெர்ஷன் மட்டுமே முதலில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். படம் 2D-யிலும் வெளியாகும் ஆனால், ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழிந்த பிறகே 2D யில் திரையரங்குகளில் பார்க்க முடியும்.

3D படத்தை திருட்டு தனமாக கேமிராவில் பதிவு செய்வது சரியான வெளியீட்டை தராது. எனவே, இணையதளங்களில் திருட்டு தனமாக வெளியாக வாய்ப்பே கிடையாது. அப்படியே வெளியானாலும், அதனை கணினியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்த்தால் படம் பார்க்கும் அனுபவம் 0% ஆகத்தான் இருக்கும்.

படக்குழுவின் இந்த முயற்சி வெற்றி தருமா என்பதை பொறுத்திருந்தான்

 

 

 

Comments

comments

More Cinema News: