திட்டமிட்டபடி ஜனவரி 25 அன்று 2.0 படம் வெளியானால் பேட்மேன் படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என நடிகரும் தயாரிப்பாளருமான அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

2.0

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் – ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.

2.0

இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் ‘பேட்மேன்’ (PadMan) என்கிற ஹிந்திப் படம் உருவாகிவருகிறது. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  தனுஷுடன் கூட்டணி அமைத்தது காரணம் இதான் !

தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.

rajini 2.0

முதலில், இந்தப் படம் ஏப்ரல் 13 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஜனவரி 26-ம் தேதியே வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனால் ரஜினி படங்களின் வெளியீடு குறித்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

அடுத்தடுத்த நாள்களில் அக்‌ஷய் குமாரின் படங்கள் வெளியாவது சாத்தியமில்லை. எனவே, 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் எனச் சொல்லப்பட்டது.

இதனால் தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் காலா படம் 2.0-க்கு முன்பு பொங்கலன்று வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் காலா படத்தைத் தயாரிக்கும் தனுஷ் தரப்பு, இச்செய்தியை மறுத்தது.

அதிகம் படித்தவை:  கபாலி ஜூலை 15 இல்லை. ரிலீஸ் தேதியில் மாற்றம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இந்நிலையில் இந்தக் குழப்பம் குறித்து அக்‌ஷய் குமார் கூறியதாவது: என்னுடைய படங்களை எதற்காக மோதலுக்கு உள்ளாக்குவேன்? பேட்மேன் அல்லது 2.0 இரண்டில் ஒன்றுதான் ஒரேசமயத்தில் வெளியாகும்.

ஜனவரி 25 அன்று 2.0 படம் வெளிவந்தால் பேட்மேன் படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம். இல்லாவிட்டால் அதே நாளில் பேட்மேன் வெளியாகும். பேட்மேன் நான் தயாரித்த படம். 2.0 ரஜினி, ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோரைச் சார்ந்தது என்று கூறியுள்ளார்.

இந்த மாதம் 2.0 படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் டிரெய்லர் வெளிவரவுள்ளது. எனவே எல்லாமே திட்டமிட்டபடி நடப்பதால் ஜனவரி 25 அன்று 2.0 படம் நிச்சயம் வெளியாகும் என்று அறியப்படுகிறது.