சென்னை : ரஜினி நடித்து வரும் 2.0 படம் தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென படம் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

சங்கர் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில், ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் 2.0. ரூ.450 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

95% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் உலகத்தரத்தில் 3D தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன.