rajini-shahrukhan

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 20-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. இவ்விழாவில் கமல் ஹாசன், ஷாருக்கான் என இந்திய சினிமாவின் முக்கியமான பிரபலங்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். இந்நிலையில் வெறும் 1 மணிநேரம் நடைபெறும் இந்த விழாவிற்கு மட்டும் ரூ. 6 கோடி செலவாகியுள்ளதாம். இதைக்கேட்டு திரையுலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.