‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடி வருகிறார். ரஜினிகாந்துக்கு எதிராக மிரட்டலான வில்லன் வேடங்களில் அக்ஷய் குமார், சுதன்ஷு பாண்டே நடிக்கின்றனராம்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் 2 மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட 450 கோடியை தொட்டுவிட்டது 2.0 படத்தின் பட்ஜெட். பாகுபலி சாதனைகள் முறியும் தேதியை இப்போதே குறித்து விடும் அளவுக்கு 2.0 படக்குழு அதிரடி திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே பேலன்ஸாம். தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

முதலில் 2.0 படத்தை 2D மற்றும் 3D ஆகிய பதிப்புகளை ஒரே நாளில் திரையரங்கின் தன்மையை பொருத்து வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு.

ஆனால் தற்போது, 2.0 படத்தின் 3D வெர்ஷன் மட்டுமே முதலில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். படம் 2D-யிலும் வெளியாகும் ஆனால், ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழிந்த பிறகே 2D யில் திரையரங்குகளில் பார்க்க முடியும்.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் நடத்த ‘2.0’ டீம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கே ரூ.15 கோடிக்கு மேல் பட்ஜெட் போட்டுள்ளனராம்.

படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவை நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும், டிசம்பர் மாதம் டிரையிலர் ரிலீஸை சென்னையிலும் நடத்தவுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ஆம் தேதி ‘3டி’ தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ளனர்.