ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ்வாக இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். அத்துடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

2.0

இந்த விழாவில் கலந்துகொள்ள விஜபி கட்டணம் எவ்வளவு தெரியுமா? 6 பேர் கொண்ட மேஜைக்கு இந்திய மதிப்பில் 3,71,625 ரூபாயும், 8 பேர் கொண்ட மேஜைக்கு 4,69,179 ரூபாயும், 12 பேர் கொண்ட மேஜைக்கு 6,81,637 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மாலை 5 மணி முதல் இரவு 11.30 வரை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் என்னென்ன ஸ்பெஷல் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 27ஆம் தேதி மாலை துபாயில் நடைபெற உள்ளது. துபாயில் அமைந்துள்ள புர்ஜ் பார்க்கில் இந்த விழா நடைபெறுகிறது.

2.0 making

இந்த இடத்தில், இதுபோன்ற இசை வெளியீட்டு விழா நடத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியிருப்பது இதுதான் முதல்முறை.

125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து, மிகப்பெரிய இசைக்கச்சேரியை நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அத்துடன், ‘2.0’ படத்தில் இருந்து ஒரு பாடலை நேரடியாக இசைக்கவும் இருக்கிறார்.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.ரஹ்மான் – ஷங்கர் கூட்டணியில் இதுவரை வெளியான பாடல்களுக்கு, பாஸ்கோ நடனக்குழுவினர் நடனமாட உள்ளனர்.

rajini 2.0

இந்த நிகழ்ச்சியைப் பார்க்க 12000 பேருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், துபாயில் இருக்கும் மிகப்பெரிய மால்களில், பெரிய எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இதன்மூலம் ஒன்றரை லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் அரசர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.