19 வருடம் சினிமாவை ஆண்ட ஒரே காமெடியன்.. தங்கத்தட்டில் வைத்து தாங்கிய இயக்குனர்கள்

19 வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து, தமிழக அரசின் சிறந்த காமெடியன் என்ற விருதையும் பெற்ற காமெடி நடிகர் ஒருவர், வருடத்திற்கு 50 படம் நடித்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார். வருடத்தின் மிகக் குறைந்த பட்சம் என்பதே 5 படங்களாம்.

சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி என உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து விட்டார். இவர் நடிகர் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் ஆசையுடன் ஏற்று நடிப்பாராம்.

Also Read: எம்ஜிஆர், சிவாஜி இருவருக்கும் மிகச் சரியான ஜோடி.. பழம்பெரும் நடிகைக்கு கிடைத்த கௌரவம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மேடை நாடங்களில் நடித்து, பின் 1965 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் சுருளி ராஜன். ஒளி பிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, முரட்டுக்காளை, ஹிட்லர் உமாநாத், பாலாபிசேகம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப நாட்களில் இவர் காமெடியனாக நடித்திருந்தாலும், ‘ஆதிபராசக்தி’ , ‘மாந்தோப்பு கிளியே’ என்னும் திரைப்படங்களில் இவர் பேசிய சென்னை வட்டார பேச்சு தான் ரசிகர்களிடையே இவரை கொண்டு சேர்த்து. ‘முரட்டு காளை’ திரைப்படத்திலும் இவரின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: நடிகர் சுருளிராஜன் இறந்தது எப்படி தெரியுமா? இப்படி ஓர் சாவு யாருக்கும் வரக்கூடாது

வருடத்திற்கு 50 படம் என ஓய்வின்றி சினிமாவில் படு பிசியாக நடித்து கொண்டிருந்த உச்ச நேரத்திலேயே தன்னுடைய 42 வது வயதில் சுருளி ராஜன் உயிரிழந்தார். அவர் மறைவிற்கு காரணம் அவருடைய ஓய்வற்ற உழைப்பு தான் என்று கூறுகிறார்கள்.

சுருளிராஜனை நினைவூட்டும் விதமாக மறைந்த சின்ன கலைவாணர் விவேக், ‘வாடா’ மற்றும் ‘முரட்டுக்காளை 2’ படத்தில் சுருளிராஜன் குரலில் பேசி அவரை போலவே நடித்திருப்பார். இது இன்றைய ரசிகர்களுக்கு சுருளிராஜன் என்னும் ஒரு நடிகர் இருந்தார் என்பதை சொல்லும் விதமாக இருந்தது.

Also Read: 20 வருடத்திற்கு முன்னரே விவேக் உடன் நடித்த சமுத்திரக்கனி.. கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த கே பாலச்சந்தர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்