ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அக்டோபர் புரட்சியை நினைவுக்கூறும் வகையில் உள்ளது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்.

மெரினா கடற்கரையில் கூடியுள்ள லட்சக்கணக்கான மக்கள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. தலைநகர் சென்னையில் உள்ள மக்கள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள மக்களும், அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் நோக்கியிருப்பது மெரினா கடற்கரையைத்தான்.

இதில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என்று சாதி, மதம் பார்க்காமல் கூடியுள்ளனர் மக்கள். அவர்கள் வைக்கக்கூடிய ஒரே  கோரிக்கை எங்களின் கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள். அவசர சட்டம் எல்லாம் வேண்டாம். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்.

இந்த கோரிக்கை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் வரக்கூடிய கருத்துக்கள் அனைத்துமே நாங்கள் மெரினா கடற்கரைக்கு வர வேண்டும் என்பதே.

187 நாடுகளில் வாழக்கூடிய உலகத் தமிழர்களின் ஒரே கனவு மெரினா கடற்கரைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதே என்றால் அது மிகையாகாது.