Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிக் டிக் டிக் படத்தை கலாய்த்து, தங்களின் 17 வது லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ் படம் 2 டீம் !

தமிழ் படம் 2.0

தமிழ் படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் மீண்டும் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை ரெடி செய்துள்ளார்கள். இம்முறை போலீஸ் அத்தியாயம் என்றும், ஹீரோ ஏழுச்சாமி என்றும் தகவல்களை வெளியிட்டனர். இப்படத்தில் சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே , சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சினிமா துறை மட்டுமன்றி உள்ளூர் அரசியல் தொடங்கி டிரம்ப் வரை கலாய்த்துவிட்டனர்.

இயக்குனர் அமுதன் தன் ட்விட்டரில் படத்தின் அடுத்த பாடல் மற்றும் 17-வது போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

அதே போல் இன்று மாலை விண்வெளியில் சிவா, சதிஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் மூவரும் அமர்ந்து சீட்டாட்டம் ஆடும் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். மேலும் சிவாவின் ஒபெநிங் வீடியோ பாடல் வரும் ஜூன் 26 மாலை 5 மணிக்கு வரும் என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top