செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பயணிகள் விமானம் மூலம் தாக்கியது.

இந்த தாக்குதலை 19 தீவிரவாதிகள் அரங்கேற்றினர். அதற்காக 4 பயணிகள் விமானங்களை கட்டிடத்தின் மீது மோதி வெடிக்கச்செய்தனர். இதில் பயணித்த 246 பேர் உயிரிழந்தனர்.

மேலும் வர்த்தக கட்டிடத்தில் இருந்த 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை அமெரிக்காவை இந்த அளவிற்கு கோரமாய் யாரும் தாக்கியதில்லை.

இந்த தாக்குதல் நிகழ்ந்து 16 வருடங்கள் ஆன நிலையில் அமெரிக்கர்கள் இந்த நாளை தங்கள் தேசிய உணர்வை தூண்டிய தினமாக அனுசரித்து நினைவு கூறுகிறார்கள்.

இன்றும் பல அமெரிக்கர்கள் பல்வேறு இடங்களில் தாக்குதலில் இறந்தோருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். இந்த தாக்குதல் குறித்த பல மர்மங்கள் இன்னும் வெளிவராமல்தான் உள்ளன.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இதற்கு பதிலடியாக ஈராக்கை காலி பண்ணிய அமெரிக்க செய்தது சரியா? உங்கள் கருத்து.