Connect with us
Cinemapettai

Cinemapettai

anikha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வயசு என்னமோ 16தான்.. ஆனால் அதற்குள் தயாரிப்பாளர்களை வசியம் செய்த அணிகா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையானவர் அனிகா சுரேந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அங்குள்ள முன்னணி நடிகர்களின் அன்பை சம்பாதித்தார்.

அதிலும் குறிப்பாக தமிழில் தல அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து அஜித் ரசிகர்களின் பேவரைட் நடிகையாகவும் மாறிவிட்டார் அனிகா சுரேந்திரன். இவ்வளவு நாட்களாக குழந்தை போல் இருந்த அனிகா சமீபகாலமாக பருவப்பெண் ரேஞ்சுக்கு உடையணிய ஆரம்பித்தார்.

அப்போதே அவர் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாகி அதிக வாய்ப்பிருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் வந்ததைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த கப்பெல்லா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

இத்தனைக்கும் அனிகாவுக்கு வெறும் 16 வயதுதான் ஆகிறது. ஆனால் இப்போதே அவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமா அவரை எப்படியாவது தெலுங்கிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளதாம்.

anikha-cinemapettai-01

anikha-cinemapettai-01

இதே போல் தான் சமீபத்தில் கீர்த்தி செட்டி என்ற 19 வயது நடிகை தெலுங்கு சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை தொடங்கிய நிலையில் அவருக்கு போட்டியாக அனிகாவை களம் இறக்க முடிவு செய்துள்ளார்களாம். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகைகளையும் கிளாமர் நடிகைகளாக மாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

தமிழில் ஒன்னும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் நடித்த அம்மு அபிராமி என்பவர் தெலுங்கில் சமீபத்தில் FCUK என்ற படத்தில் அநியாயத்திற்கு கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Continue Reading
To Top