Tamil Cinema News | சினிமா செய்திகள்
16-வயதினிலே படத்தில் சப்பாணியாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

ரஜினி, கமல்,ஸ்ரீ தேவி ஆகிய மூவருமே சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஆவார், இவர்கள் மூவரின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது 16 வயதினிலே இந்த படத்தில் அனைவரின் கதாபாத்திரமும் மக்களால் பேசப்பட்டது.
குறிப்பாக கமல் இந்த படத்தில் சப்பாணியாக நடித்திருந்தார் அவரின் வேடம் தான் அதிகமாக பேசப்பட்டது இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா சப்பாணி வேடம் பற்றி மரகதக்காடு என்ற படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது இப்பொழுது இந்த படத்தின் நட்சத்திரங்களை பார்க்கும் பொழுது எனாக்கு ஒரு விஷயம் தொன்று கிறது. 16 வயதினிலே படத்தில் கமலை ஏன் நடிக்க வைத்தேன் என்றால் கமல் மிகவும் அழகாக இருப்பார் அதனால் அவரை கொஞ்சம் அழுக்காக காட்டினால் தான் மக்கலுக்கு அது பிடிக்கும் என கூறினார்.
மேலும் இந்த படத்தில் நாகேஷை போட்டிருந்தால் மக்களனைவரும் எழுந்து போய்விடுவார்கள், ப்ளாக் அண்ட் ஒயிட் எடுக்கும் முடிவில் இருந்ததால் நாகேஷை நடிக்க வைக்கலாம் என்று இருந்தேன், ஆனால் படத்தை கலரில் எடுத்ததால் கமலை நடிக்கவைதேன் என கூறினார்.
