14 வயது சிறுவனின் உயிரை காவு வாங்கிய மெர்சல்…! சோகத்தில் விஜய் ரசிகர்கள்..!!! - Cinemapettai
Connect with us

Cinemapettai

14 வயது சிறுவனின் உயிரை காவு வாங்கிய மெர்சல்…! சோகத்தில் விஜய் ரசிகர்கள்..!!!

News | செய்திகள்

14 வயது சிறுவனின் உயிரை காவு வாங்கிய மெர்சல்…! சோகத்தில் விஜய் ரசிகர்கள்..!!!

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியையட்டி இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளிவருகிறது. இந்த படம் வெளிவருவதற்கு விலங்குகள் நலவாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்ற சர்ச்சை இருந்து வந்த நிலையில், கேளிக்கை வரி காரணமாக மெர்சல் படம் தீபாவளி பண்டிகையான இன்று வெளிவருவதில் சிக்கல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கேளிக்கை வரியை 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் விஜய் கடந்த 15&ந் தேதி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

mersal

அதைத் தொடர்ந்து, மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரியமும் அனுமதி அளித்தது. எனவே மெர்சல் படம் வெளியாவதற்கு இருந்த தடை நீங்கியது. நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளிவருவதற்கு முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியதாக தெரிகிறது.

மெர்சல் திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அவரை மீண்டும் நடிகர் விஜய் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். பல்வேறு சிக்கல்களைத் தாண்டி மெர்சல் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர்.

mersal-vijay

விஜய் ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து இன்று காலை முதல் காட்சி பார்த்தனர். காலை 7 மணி முதல், காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் கொண்டாடினர்.

இதனையொட்டி திரையரங்குகளில் அதிக அளவில் விஜயின் கட்டவுட் வைத்து வந்தனர்.

இந்த நேரத்தில் தான் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி , காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் கள் சிலர் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மெர்சல் படத்தின் பேனரை 14 வயது சிறுவன் உட்பட 4 பேர் சுவரின் மீது ஏறி நின்று பேனரை கட்டியுள்ளனர்.

அப்போது சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததால், எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

mersal

இந்த பேனர் கலாச்சாரத்தில் ஒவ்வொரு முன்னணி நடிகர்கள் படம் வரும்போது ரசிகர்கள் தங்கள் அறியாமல் உயிரை பணயம்வைத்து செய்வது கண்டிக்கத்தக்கது.

இதனை அந்த முன்னணி நடிகர்கள் தான் எனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று தடுக்க வேண்டும், இல்லயென்றால் வருடந்தோறும் ஒரு உயிர் இப்படி வீணாக போவது மிகவும் பரிதாபம்.

இறந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அவர்களுக்கு தெளிவான அறிவுரை வழங்க வேண்டியதும் நடிகரிகளின் கட்டாயமே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top