புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பெண்களை அனுமதிக்கும் மசூதி, 1300 ஆண்டு பழமையான ரகசிய பாதை.. எங்க இருக்கு தெரியுமா?

இந்த மசூதி 4,200 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இரண்டு மாடி மாளிகையாகும். இதன் உட்பகுதி அகம்பள்ளி மற்றும் புறம்பள்ளி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மிகவும் வெப்பமான காலநிலையிலும் கூட உள்ளே குளிர்ச்சியாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மசூதி பல மக்களின் வழிப்பாட்டு தலமாக உள்ளது. இறை நம்பிக்கை மிகுந்த ஒரு இடமாக உள்ளது. ஆம் இந்த பழம்பெரும் கட்டிடம் ஒரு மசூதி. இந்த மசூதிக்கு அருகில் ஒரு தேவாலயமும் ஒரு கோவிலும் உள்ளது.

இஸ்லாமிய மிஷனரி நடவடிக்கைகளுக்காக கேரளாவிற்கு தனது தோழர்களுடன் வந்த மாலிக் பின் தினார் என்பவரால் இந்த தேவாலயம் நிறுவப்பட்டது என்று மஸ்ஜித் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மசூதிக்கு இரட்டை சுவர்கள் உள்ளன. அவற்றுக்கிடையே ஒரு நபர் நடந்து செல்லக்கூடிய ஒரு ரகசிய பாதையும் உள்ளது.

இந்தப் பாதையானது அருகிலுள்ள மீனச்சிலை ஆற்றுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெரும்பாலான மசூதிகளில் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். அனால் இந்த மசூதியில் பெண்களை அனுமதிக்கிறார்கள்.

இந்த மசூதி கேரளாவில் தான் உள்ளது. கோட்டயம்-குமரகம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இது சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது என்றும், அதன் கட்டிடக்கலை அழகுக்காகவே மதிப்பிடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மக்கள் வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளும் இந்த இடத்தை பார்க்க ஆவலோடு சென்று வருகின்றனர்.

- Advertisement -

Trending News