தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நிறைய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. காற்று மாசு காரணமாக உச்ச நீதிமன்றம் நிறைய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.

அதிக சத்தம் எழுப்பும், அதிக மாசுக்களை உருவாக்கும், குப்பைகளை உருவாக்கும் பட்டாசுகளை தவிர்க்குமாறு மக்களுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டை மதிக்காத நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மொத்தம் 13 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் வெடி பொருட்கள் வைத்திருந்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது சேரன்மகாதேவி போலீசார் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

deepawali-crackers-people-arrested1
deepawali-crackers-people-arrested1

அங்கு சிறுவர்களிடம் சிறுவர்களிடம் இருந்த பட்டாசுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூரில் 42, கோவையில் 30 மற்றும் நெல்லையில் 13 என்று மொத்தம் தமிழகம் முழுக்க சிறுவர்கள் உட்பட 78 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.