சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நாமினேஷன்க்கு வந்த 13 போட்டியாளர்கள்.. பழைய போட்டியாளர்களுக்கு பதிலாக பலியாடாக சிக்கிய 5 டம்மி பீஸ்கள்

Vijay Tv Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நல்லா இருக்கோ இல்லையோ, அதை பார்த்துட்டு தூங்கினால் தான் தூக்கமே வருது என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு வருஷமும் விடாமல் 100 நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஒரு மாதம் கடந்த நிலையில் மற்ற சீசன்களை விட சுவாரஸ்யம் கம்மியாகத்தான் இருக்கிறது.

இருந்தாலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எப்படி விளையாடுகிறார்கள், யார் என்ன பேசுகிறார்கள், யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் நேற்ற சுனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

சுனிதாவின் விளையாட்டு நன்றாக இருந்தாலும் மக்களின் ஓட்டு கம்மியாக கிடைத்ததால் வெளியேறி விட்டார். அந்த வகையில் மீதமிருக்கும் 20 போட்டியாளர்களில் இன்று நாமினேஷனுக்கு 13 போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். அதில் சௌந்தர்யா, ஜெஃப்ரி, தீபக், ஜாக்லின், ரஞ்சித், தர்ஷிகா, சத்தியா, சாட்சனா, ராணவ், சிவகுமார், வர்ஷினி, மஞ்சுரி, ரியா இவர்கள் அனைவரும் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள்.

அதனால் பழைய போட்டியாளர்கள் இந்த வாரம் தப்பித்து விடலாம் என்பதற்கு ஏற்ப புதுசாக போன போட்டியாளர்களில் நிறைய பேர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் அவர்களில் இருவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அதன்படி வர்ஷினி மற்றும் ராணவ் தான் இந்த வாரம் வெளியே போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு இடையில் இந்த வாரம் ஆண்கள் அணிக்கு யாரை அனுப்புவது என்ற பஞ்சாயத்தில் பழைய போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ரியாவை அனுப்பலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மஞ்சரி, ஒரு மாதமாக விளையாடிய ஜாக்லின் ஆண்கள் அணிக்கு போய் சமாளிக்க முடியாமல் திணறினார்.

இப்படி இருக்கும் பொழுது வந்த ஒரு வாரத்திலேயே எங்களில் ஒருவரை ஆண்கள் அணிக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு பண்ணுவது எந்த விதத்தில் நியாயம் என்று அவருடைய பாயிண்ட்டை முன் வைத்திருக்கிறார். அந்த வகையில் மஞ்சரி, ஆண்கள் அணிக்கு தர்ஷிகாவை அனுப்பலாம் என்று அவருடைய கருத்தை சொல்கிறார். இப்படி பெண்கள் அண்ணியிடம் கருத்துக்கள் முன்னும் பின்னும் ஆக போய்க்கொண்டிருக்கிறது

- Advertisement -

Trending News