Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியாவில் இருந்து இடம்பெயரும் 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள்…

ஐபிஎல் தொடரின் அடுத்தாண்டு போட்டிகள் இந்தியாவில் இருந்து இடம் மாறும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கிரிக்கெட்டின் திருவிழா ஐபிஎல் நடப்பு தொடர் ஏப்ரல் மாத வாரத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாண்டு தடை முடித்து, தொடரில் களமிறங்கி இருக்கிறது ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள். அதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேராதரவு இருக்கிறது. இதனால், ஒவ்வொரு போட்டியும் திகில் கிளப்பி கடைசி ஓவரில் திரில்லான வெற்றியை தட்டுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனாலே, கிரிக்கெட் விரும்பிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி என்றால் முதல் ஆளாக பார்க்க தொடங்கி விடுகின்றனர்.

எந்த தொடரிலும் இல்லாமல், இந்த வருடம் ஹைதராபாத் அணியை தவிர மற்ற அணிகளுக்கு இந்திய வீரர்கள் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளனர். அதை போல, பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் சிஎஸ்கேவிற்கே சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இதுவரை எல்லா போட்டிகளையும் துவம்சம் செய்த, சென்னையையே தூக்கி சாப்பிட்டது அஸ்வின் மட்டும் தான். பல வருடங்களாக தோனியின் தலைமையில் இருந்த அஸ்வினுக்கு அவரின் எல்லா மூவ்களும் தெரியும் என்பதே இந்த வெற்றிக்கு காரணம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்த நடப்பு தொடரின் சுவாரசியங்கள் ஒரு பக்கம் இருக்க, அடுத்த தொடர் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அடுத்த வருடம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே, அரசியல் வட்டாரத்தில் பல சர்ச்சைகள் நிலவி வருவதால், அடுத்த ஐபிஎல் சீசனை வெளிநாடுகளுக்கு மாற்ற இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா, துபாய், சார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களில் ஐபிஎல்லை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதில், அதிக தமிழர்கள் வாழும் துபாயில் ஐபிஎல் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாகவே, 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ முறையாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தேர்தல் மற்றும அரசியல் காரணங்களுக்காக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top