Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்த படத்துக்காக 12 கிலோ எடையை குறைத்த சந்தீப் கிஷன்.. புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!
இன்றைய தேதியில் ஹீரோக்கள் தங்களின் படத்திற்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் பல மெனக்கெடல்களை செய்வது வாடிக்கையாகி விட்டது. கமல், விக்ரம், சூர்யா போன்றவர்கள் டெடிகேஷனில் டாப்பில் இருந்து தங்கள் படங்களுக்கு தயார் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
இவர்கள் மட்டுமன்றி பலரும் தங்களை தாங்களே வருத்தி ரோலுக்கு ரெடியாகி வருகின்றனர். அந்த வகையில் இளம் நாயகன் சந்தீப் கிஷன்(sundeep kishan) தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ.
நம் தமிழில் யாருடா மகேஷ் வாயிலாக அறிமுகமானவர். மாநகரம், மாயவன் படங்கள் இவருக்கு நல்ல ரீச் பெற்று தந்தது. நரகாசுரன் மற்றும் கண்ணாடி ஆகிய படங்கள் ரிலீசுக்கு வெயிட்டிங்.
அடுத்ததாக இவர் நடிக்கும் A1 எக்ஸ்பிரஸ் ஒரு ஸ்போர்ட்ஸ் ஜானர் படம். இப்படத்தில் ஹாக்கி வீரராக சந்தீப் நடிக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இசை. லாவண்யா திரிபாதி ஹீரோயின். டென்னிஸ் ஜீவன் கனுகொலனு இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படம்.

sandheep-kishan
கடத்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு காரணமாக இவர் 12 உடம்பை குறைத்து ட்ரிம் ஆகியுள்ளார். புகைப்படத்தை பார்க்கும் போதே படத்துக்காக எவ்வளவு உழைத்துள்ளார் என்பது தெரிகிறது.

sandheep-kishan-cinemapettai
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
