mersal

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு-டியூபில் வெளிவந்தது. டீசர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே பல உலக சாதனைகளை படைத்துவிட்டது.

இந்த டீசர் தான் தற்போது உலகத்திலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசராக நம்பர் 1 இடத்தில் உள்ளது.இந்நிலையில் டீசர் வெளிவந்த 12 மணி நேரத்திலேயே ரியல் டைமில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதுவரை வேறு எந்த டீசரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லையாம், மேலும், 685k பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர்.இதோடு மட்டும் நிற்காமல் கண்டிப்பாக 1 மில்லியன் லைக்ஸ் கொண்டு வருவோம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.