Tamil Nadu | தமிழ் நாடு
புதிய வடிவில் 108 ஆம்புலன்ஸ் சேவை.. அதிரடி காட்டும் தமிழக அரசு
அன்புமணி ராமதாஸின் முழு முயற்சியால் 108 ஆம்புலன்ஸ் சேவை இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையின் மூலம் 2016ஆம் ஆண்டு வரை 16 ஆயிரம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் உள்ளேயே பிறந்ததாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதன் முலம் பல உயிர்களை காப்பாற்றி உள்ளதாக தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் நாளொன்றுக்கு 15 ஆயிரம் அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஆம்புலன்ஸ் ஒரு சில நிமிடங்கள் தாமதிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது வரை மாநகராட்சி பகுதிகளுக்கு 8.2, கிராமப் பகுதிகளுக்கு 13 நிமிடங்களும், மலைப் பகுதிகளுக்கு 16 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ் வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனை இன்னும் துரிதப்படுத்துவதற்கு ஓலா மற்றும் உபர் சேவை போல ஆம்புலன்ஸ் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை டிராக் செய்து கொள்ளும் சேவை அறிமுகப்படுத்த உள்ளதாம்.
இந்த சேவை இன்னும் இரண்டு மாதத்திற்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையின் மூலம் எவ்வளவு விரைவாக ஆம்புலன்ஸ் தாங்கள் இருக்கும் இடத்தை வந்தடையும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
