50 ஆண்டுகளில் 1000 படங்கள்.. நாகேஷ் நடிப்பில் வெள்ளி விழா கண்ட 10 படங்கள்

காமெடி நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கும் நடிகர் நாகேஷ் முதலில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, அதன் பின் துணை நடிகர், வில்லன் என 50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்த பெருமைக்குரியவர். இவருடைய நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருப்பதால் இவர் கோலிவுட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக பார்க்கப்பட்டார். அதிலும் இவர் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 10 படங்களின் லிஸ்ட்.

சர்வர் சுந்தரம்: 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நாகேசுடன் இணைந்து முத்துராமன், கே ஆர் விஜயா ஆகியோர் நடித்திருப்பார்கள். ஒரு சர்வராக இருக்கும் நபர் சினிமாவில் ஹீரோவாக மாறுவது பற்றிய கதைதான் இந்த படம். இப்படம் நாகேஷின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக இன்றும் இருக்கிறது. இந்த திரைப்படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடி வெள்ளி விழா கண்டதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், சௌகார் ஜானகி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் நாகேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் இப்போதும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

Also Read: எம்ஜிஆருக்காக பாலச்சந்தரை பகைத்துக் கொண்ட நாகேஷ்.. பூதாகரமாக வெடித்த சண்டை

தேன் கிண்ணம்: 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நாகேஷ், சுருளி ராஜன், விஜயலலிதா ஆகியோர் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி படமாக வெளிவந்த இந்த திரைப்படத்தில் நாகேஷின் நடிப்பு நன்றாக இருக்கும். அதனாலேயே இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

திருவிளையாடல்: புராணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவாஜி, நாகேஷ், சாவித்திரி ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் தருமி என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருப்பார். அதிலும் சிவபெருமானாக வரும் சிவாஜியிடம் அவர் உரையாடும் அந்தக் காட்சி இப்போது வரை பிரபலமாக இருக்கிறது. இந்த படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடி வெள்ளி விழா கண்டதும் குறிப்பிடத்தக்கது

நீர்க்குமிழி: கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்திருப்பார். மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அங்கு வேலை பார்ப்பவர்கள் பற்றி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நாகேஷுக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது.

Also Read: நாகேஷ், சிவாஜியுடன் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம்.. சூப்பர் ஸ்டாரோட முடிந்து போன சகாப்தம்

காதலிக்க நேரமில்லை: 1964 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமாக வெளியான இந்த படத்தை ஸ்ரீதர் இயக்கியிருப்பார். இதில் ரவிச்சந்திரன், காஞ்சனா, டிஎஸ் பாலையா, முத்துராமன், சச்சு இவர்களுடன் நாகேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் செல்லப்பா என்ற கேரக்டரில் நாகேஷ் அடிக்கும் லூட்டி கொஞ்ச நஞ்சம் அல்ல. இந்தப் படத்தை பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது மட்டுமின்றி படத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தார்.

அனுபவி ராஜா அனுபவி: 1967 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் திரைக்கதை எழுதி இயக்கிய இந்த படத்தில் நாகேஷ் இரு வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவருடன் முத்துராமன், மனோரமா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது அது மட்டும் இன்றி இதில் ஹீரோவாக நடித்த நாகேஷின் நடிப்பு அந்த சமயம் டாப் ஹீரோவாக இருந்த நடிகர்களையே வியக்க வைத்தது இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது

தில்லானா மோகனாம்பாள்: 1968 ஆம் ஆண்டு ஏபி நாகராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிவாஜி, பத்மினி உள்ளிட்டோருடன் நாகேஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இதில் நாதஸ்வர வித்வானாக இருக்கும் சிவாஜி மற்றும் பரதநாட்டியத்தில் திறமைசாலியாக இருக்கும் பத்மினி இருவருக்கும் முதலில் காதல் ஏற்படுவது தான் படத்தின் கதை. இதில் நாகேஷ் சவடால் வைத்தி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய உச்சகட்ட நகைச்சுவையை வெளிக்காட்டி படம் முழுவதிலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

Also Read: நாகேஷ் இடத்தை சிக்குனு பிடித்த யோகி பாபு.. இவரைப் பார்த்து கத்துக்கோங்க காண்ட்ராக்டர் நேசமணி

சோப்பு சீப்பு கண்ணாடி: 1968 ஆம் ஆண்டு திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாகவும் விஜய நிர்மலா கதாநாயகியாகும் நடித்த இந்த படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி படமாகவும் வெளியானது. இதில் காமெடியுடன் நாகேஷ் பல நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தி கதாநாயகனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

தில்லு முல்லு: 1981 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் மாதிரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்களுடன் தேங்காய் சீனிவாச, சௌகார் ஜானகி உள்ளிட்டோருடன் நாகேஷ் இணைந்து நடித்திருப்பார்கள். இதில் நாகேஷ் அவராகவே இந்த படத்தில் நடித்திருப்பார். இதில் ரஜினியின் காமெடி வெளிப்படுத்துவதற்கு நாகேஷ் முக்கிய காரணமாக இருந்தது பலராலும் பாராட்டப்பட்டது.

இவ்வாறு இந்த 10 படங்களும் நாகேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படங்களாகும். நாகேஷ் தன்னுடைய 75-வது வயதில் இன்றைய தினத்தில் தான் காலமானதால் அவருடைய நினைவு நாளன்று அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் தற்போது ரசிகர்களிடம் பரவலாக பேசப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்