சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

1300 கோடி பட்ஜெட்.. ராஜமெளலியின் மெகா கூட்டணியில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம்

ராஜமெளலி சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் இதுவரை இந்திய சினிமாவிலேயே இல்லாத வகையில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்திய சினிமாவில் அதிகப் பொருட்செலவில் பிரமாண்டமாக படமெடுக்க முடியும். அதை ஹாலுவுட் படங்கள் மாதிரி விளம்பரப்படுத்தி, அதை உலகம் முழுவதும் ரிலிஸ் செய்யவும் முடியும். அதன் மூலம் ஆயிரம் கோடி வசூலிக்க முடியும் என்பதை தனது பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களின் மூலம் உண்மையில் செய்து காட்டியவர் இயக்குனர் ராஜமெளலி.

ராஜமெளலியின் படங்கள் பான் இந்தியா படமாகத்தான் வெளியாகும் என்ற நிலையை உருவாக்கியுள்ள நிலையில், அவர் அடுத்து இயக்கும் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. அதன்படி, ராஜமெளலி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது.

இந்திய சினிமாத்துறையினரும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து எப்போது பணியாற்றுவர் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இருவரும் ஊடகங்களில் வெளிப்படையாக அறிவித்தனர். இதற்காக பிரத்யேக ஹேர் ஸ்டைலை மகேஷ் பாபு வளர்த்துவருகிறார். படத்தைக்கு முந்தைய வேலைகள் நடந்து வரும் நிலையில், SSMB29 படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் என ராஜமெளலியின் தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் கூறியிருந்தார்.

1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்

வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் மகேஷ்பாபு இப்படத்தில் ஆக்சனில் கலக்கப் போவதாகவும், இப்படத்துக்கு கருடா என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் துணை தயாரிப்பாளர் பரத்வாஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

ராஜமெளலி – மகேஷ்பாபு இணையும் புதிய படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ.1000- கோடி முதல் ரூ.1,300 கோடிக்கு மேல் இருக்கும். ஆனால் இதைத்தாண்டி தான் செலவிருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. இப்படத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட திறமையானோர் பணியாற்றுகிறார்கள் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது

இதைக்கேட்டு மகேஷ்பாபு ரசிகர்கள் வானுக்கும் பூமிக்கும் மகிழ்ச்சியில் குதித்து வருகின்றனர். இந்திய சினிமாவில் ஆயிரம் கோடியில் உருவாகும் முதல் படம் என்பதால் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர் படத்தை ஆஸ்கருக்கு கொண்டு சென்று ஒரு பாடலுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற வைத்த ராஜமெளலி, நிச்சயம் இப்படத்தை ஆஸ்கர் விருது வாங்காமல் விடப்போவதில்லை என பலரும் இப்போதே அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News