தமிழ் சினிமாவில் 100வது படம் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே வெற்றி படமாக அமைந்துள்ளது. அப்படி தனது நூறாவது படத்தில் வெற்றிக்கண்ட நடிகர்களை பற்றிய தொகுப்பு தான் இது.
சினிமாவைப் பொருத்தவரை எல்லோருக்கும் எல்லாமே அமைந்து விடாது என்பது தான் உண்மை ஒரு சில நடிகர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியை விட அதிகமான வெற்றிகள் சினிமாவில் குவியும். ஆனால் ஒரு சில நடிகர்கள் தனது கடின உழைப்பில் போட்டுமே தற்போது வரை வெற்றிக்காக போராடிக் கொண்டிருப்பது நாம் பார்த்துள்ளோம்.
ஒரு நடிகனின் வெற்றியை தீர்மானிப்பது அவர்கள் நடிக்கும் 50-வது படம் மற்றும் 100 வது படம் தான். ஏனென்றால் ரசிகன் எதிர்பார்ப்பது இந்த வரிசை படங்களை மட்டும் தான் இந்த படங்கள் வெற்றி பெற்றால் நடிகர்கள் சினிமாவில் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
அக்காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த் என இவர்கள் நடிப்பில் வெளியான 100வது படங்களின் வெற்றியைப் பற்றி பார்ப்போம்.

எம்ஜிஆருக்கு 100வது படமான ஒளிவிளக்கு படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 100வது படம் நவராத்திரி. தமிழ் சினிமாவிலேயே முதல் முதலாக 9 கதாபாத்திரங்கள் ஏற்று ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனது வித்தியாச வித்தியாசமான நடிப்பினை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றி பெற்றார். இப்படம் வெற்றி அடைந்த காலத்தில் அனைத்து நடிகர்களும் அசந்து போய் பார்க்கும் அளவிற்கு சினிமாவில் உச்சத்தில் இருந்தார் சிவாஜிகணேசன்.
முத்துராமனுக்கு 100வது படமான புன்னகை படத்தை பாலசந்தர் இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 100வது படம் ராஜபார்வை. இப்படத்தை சங்கீத சீனிவாச ராவ் இயக்கியிருந்தார். சினிமாவில் குறுகிய காலத்திலேயே 100வது படத்தில் நடித்திருந்தாலும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடையாவிட்டாலும் விமர்சன ரீதியாக அப்போது கமலஹாசனுக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 100வது படம் ராகவேந்திரா. ரஜினிகாந்த் தீவிர ராகவேந்திர பக்தர் என்பதால் இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாகவே கருதப்படுகிறது. இப்படி தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்களது 100வது படத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேற்கண்ட நடிகர்களின் சிவாஜி தவிர 100வது படத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் கார்த்திக். விஜயகாந்திற்கு 100-வது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெற்றி பெற்று சினிமாவின் வேறொரு தளத்திற்கு அழைத்துச் சென்றது. அதேபோல் கார்த்திக்கும் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தனர்.