100 நாள் ஆட்சியில் ஒரு திட்டமும் இல்ல.. கடவுளுடன் விளையாடி வருகிறார் பவன் கல்யாண் – பிரபல பூ நடிகை ஆத்திரம்

திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கீழ்த்தரமான அரசியல் செய்வதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் – ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியின்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்ட திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன் வைத்தார். இவ்விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்துக்களும், இந்து அமைப்பினரும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக விவாரணை நடத்தப்பட்டு வருகிறது. லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக பரவிய தகவலை அடுத்து, திருப்பதி கோயில் மற்றும் அதன் சமையல் கூடங்களில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் தவமிருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், லட்டு விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கீழ்த்தரமான அரசியல் செய்வதாக கூறியுள்ளார் நடிகை ரோஜா. இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகை ரோஜா. அப்போது அவர் கூறியதாவது: ”சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளோடு விளையாடி வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மக்களுக்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

”உண்மையில் கஷ்டமாக உள்ளது. தன் மீதான தவறை மறைக்க வேண்டி, சந்திரபாபு நாயுடு லட்டு விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி மார்ச் மாதத்துடன் முடிந்தது. கடந்த ஜூலையில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் வனஸ்பதி கலக்கட்டிருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டது. தன் மீதான தவற்றை விதமாகவும், ஜெகன் மோகன் ரெட்டியை பூஜ்ஜியமாக்குவதற்கும்தான் சந்திரபாபு நாயுடு இப்படி செய்து வருகிறார்.

தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் இருந்து பொய்யான அறிக்கை வெளியாகியுள்ளது. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியிலும், மாநிலத்தில் ஜன சேனாவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ள சந்திரபாபு நாயுடு நடத்தும் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம்! விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரட வேண்டும்.

மேலும், லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தன் சுய நலத்திற்காக கடவுளுடன் விளையாடி வருகிறார். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். சனாதனம் பற்றி பேசும் பவன் கல்யாண் தன் வீட்டில் அதைக் கடைப்பிடிப்பதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ‘ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில் ரோஜா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக ரூ.110 கோடியை அரசு ஒதுக்கியது. இதில் ஊழல் நடந்ததாக’ எதிர்க்கட்சிகள் புகார் கூறிய நிலையில், இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News