Connect with us
boomerang-movie

2016ல் உண்மையாகவே ரூ 100 கோடி தொட்ட படங்கள் எது?

2016ல் உண்மையாகவே ரூ 100 கோடி தொட்ட படங்கள் எது?

இந்திய சினிமாவில் தற்போது புது ட்ரண்ட் உருவாகியுள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை, எந்த படமாக இருந்தாலும் ரூ 100 கோடி கிளப் என்பது ஒரு கௌரவமாகிவிட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட்டே ரூ 100 கோடி இருக்கும், வசூல் ஆனால் ரூ 100 கோடியை பெருமையாக சொல்வார்கள், அதில் நிறைய காந்தி கணக்கும் உள்ளது. இந்நிலையில் உண்மையாகவே இந்த வருடம் ரூ 100 கோடி எட்டிய படங்களின் சிறப்பு தொகுப்பு.

ஏர் லிஃப்ட்

அக்ஷய் குமார் நடித்த Airlift படமே இந்த வருடத்தின் முதல் ரூ 100 கோடி படம். இந்த படம் இந்தியாவில் மட்டும் ரூ 100 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 200 கோடியை தாண்டியது.

கபூர் அண்ட்  சன்ஸ்

சித்தார்த் மல்கோத்ரா, அலியா பட், பவத் கான் நடிப்பில் வெளிவந்து இன்றைய இளைஞர்களின் ட்ரைண்டை அப்படியே வெளிப்படுத்திய படம் கபூர் அண்ட் சன்ஸ். முக்கோண காதல் கதையாக அமைந்த இந்த படம் எதிர் மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் ரூ 150 கோடி வரை வசூல் செய்தது.

நீர்ஜா

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் பலரின் உயிரை காப்பாற்றிய விமாணப்பணிப்பெண் நீர்ஜா வாழ்க்கையில் சோனம் கபூர் நடித்தார். இந்த படம் உலகம் முழுவதும் ரூ 120 கோடி வரை வசூல் செய்திருந்தது.

பேன் ( Fan )

ஷாருக்கான் படம் வெற்றியோ, தோல்வியோ எப்படியும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும். அதுவும் இந்தியாவிலேயே இவருடைய படம் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும். ஆனால், படத்திற்கு நல்ல விமர்சனம் இருந்தும் பேன் ரூ75 கோடி தான் இந்தியாவில் வசூல் செய்தது. உலகம் முழுவதும் சேர்த்து ரூ 150 கோடி பேன் வசூலித்தது.

பாகி

ஜாக்கி ஷெரப் மகன் டைகர் ஷெரப் நடித்த இரண்டாவது படம் பாகி. ஹாலிவுட் ஹீரோவிற்கு நிகரான உடல் தோற்றம் சண்டைப்பயிற்சி என கற்றுக்கொண்டு சினிமாவில் நடிக்க வந்தவர். இப்படத்தில் ஹீரோவுடன் இணைந்து ஹீரோயின் ஷரதா கபூரும் ஆக்‌ஷனில் வெளுத்து வாங்க படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 130 கோடி வரை வசூல் செய்தது.

கி & கா

நம்ம ஊர் ஆள் பால்கி ஷமிதாப் தோல்வியில் இருந்து மீண்டு கரீனா கபூர், அர்ஜுன் கபூரை வைத்து இயக்கிய வித்தியாசமான ஒரு படம் தான் கி & கா. ஆண்கள் வீட்டில் இருக்க, பெண்கள் வேலைக்கு போனால் என்ன? என்ற சின்ன கதையை திரைக்கதையாக உயிர் கொடுத்து இயக்கியிருப்பார். ஷாமிதாப் தோல்விக்கு பரிசாக இந்த படம் ரூ 100 கோடி வசூல் செய்தது.

தெறி

இளைய தளபதி, புலி படத்தின் மூலம் கொஞ்சம் சோர்வில் இருந்த அவர் தெறியில் ஒட்டுமொத்தமாக விட்ட இடத்தை பிடித்துவிட்டார். தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் மட்டுமில்லாமல் 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது. இப்படம் தற்போது வரை ரூ 140 கோடியை தாண்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

24

சூர்யா எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று போராடி வந்தார். அவருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படம் அமைய, இந்த படமும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது.

சாரைனோடு

அல்லு அர்ஜுன் கடைசியாக நடித்த அனைத்து படங்களும் ஹிட். மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் சாரைனோடு படம் வர, படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்தது. ஆனால், யாராலும் படத்தின் வெற்றியை தடுக்க முடியவில்லை, இந்த படமும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது.

ஜங்கிள் புக்

இது ஹாலிவுட் படமாச்சே, என நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த இந்தியாவிலேயே ரூ 250 கோடி வசூல் செய்தது. இப்படி ஒரு சாதனையை விஜய், அஜித்தே செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த வருடத்தில் வந்த படங்களில் மேலே குறிப்பிட்ட படங்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ரூ 100 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த வருடத்தில் கபாலி, சுல்தான் என பல படங்கள் வரிசை கட்டி நிற்க எந்த படம் ரூ 100 கிளப்பில் இணையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top