fbpx
Connect with us

Cinemapettai

காணாமல் போன 100 கோடி! சிக்கலில் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan-100-crore-movie

News | செய்திகள்

காணாமல் போன 100 கோடி! சிக்கலில் சிவகார்த்திகேயன்.

எல்லாத்துக்கும் தனுஷ் பண்ணின வேலை ஏதோ நல்லது செய்ய போய் இங்க வந்து முடியுது. மெரீனா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன் நடித்தது என்னவோ பத்துப்படங்கள்தான். அவற்றில் ரெமோ சொந்தப்படம்.
அதற்கு முன்புவரை லட்சங்களில் சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன், ரஜினி முருகன் படத்தில் பேசப்பட்ட சம்பளத்துக்கு மேல் கூடுதலாக 50 லட்சம் கொடுத்து நஷ்டப்பட்டார்.

சினிமாவில் மிக சொற்பமான பணத்தை மட்டுமே சம்பாதித்த சிவகார்த்திகேயன், ரெமோ படத்தை தயாரிக்கவும், மார்க்கெட்டிங் பண்ணவும் செலவு செய்ததோ சுமார் 30 கோடிக்கு மேல்.

தற்போது தயாரித்துள்ள வேலைக்காரன் படத்துக்கும் ஏகப்பட்ட கோடிகளை அள்ளி இறைத்திருக்கிறார். இது தவிர, ஆடம்பரமான கார்கள், ஈசிஆரில் பிரம்மாண்டமான பங்களா, கோடிகளைக் கொட்டி இழைக்கப்பட்ட அலுவலகங்கள் என சிவகார்த்திகேயனின் இன்றைய பகட்டான வாழ்க்கைக்குப் பின்னால் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

வரவு எட்டணா செலவு பத்தணா என்பதுபோல், சில லட்சங்கள் மட்டுமே சம்பாதித்த சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி பணம் எப்படி கிடைத்தது?
மதுரையை மையமாக வைத்து கிரானைட் பிசினஸ் செய்து வரும் பெரும்புள்ளி ஒருவர் கொடுத்த கருப்புப்பணத்தில்தான் சிவகார்த்திகேயன் சொந்தப்படத் தயாரிப்பில் இறங்கியதாக திரைப்படத்துறையில் பேசப்படுகிறது.Sivakarthikeyan

படத்தயாரிப்பில் அனுபவம் இல்லாததினாலும், அவருடைய பினாமியின் ஆதிக்கத்தினாலும் 100 கோடி ரூபாய் போன இடம் தெரியவில்லை. வேலைக்காரன் படத்தை வெளியிடும் முன்பே மொத்தப்பணமும் கரைந்துபோய், தற்போது வேலைக்காரன் படத்தை முடிக்கவே பணமில்லாமல் திணறுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

வேலைக்காரன் படம் திட்டமிட்டபடி கடந்த மாதம் வெளியாகி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. இன்னும் ரிலீஸ் ஆகாததினால் பண வரவுக்கு வழியில்லாமல் போய்விட்டதாம்.அது மட்டுமல்ல வேலைக்காரன் படத்தின் ரிலீஸுக்கே சுமார் 15 கோடி பணம் தேவைப்படுகிறதாம்.Sivakarthikeyan-Velaikkaran

இந்த பணத்தைப் புரட்டவே முடியாதநிலையில் அவசரப்பட்டு பொன்ராம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டனர். கையில் பணப்புழக்கம் இல்லாததினால் படத்தில் பணிபுரியும் முன்னணி டெக்னீஷியன்களுக்கே இன்னமும் சம்பளம் கொடுக்கப்படவில்லையாம்.

அது மட்டுமல்ல படப்பிடிப்பில் லைட்மேன்களுக்கு பேட்டா கூட கொடுக்க முடியாமல் இழுத்தடிக்கிறார்களாம். சம்பளம், பேட்டா கொடுக்காததினால் கடுப்பான தொழிலாளர்களும், டெக்னீஷியன்களும் இயக்குநர் பொன்ராமிடம் முறையிட்டுள்ளனர்.sivakarthikeyan-issue

சிவகார்த்திகேயனை வைத்து ஏற்கனவே ரஜினி முருகன் படத்தை இயக்கியபோதும் ஏறக்குறைய இதே அனுபவம் ஏற்பட்டு தினமும் ரத்தக்கண்ணீர் வடித்தார் பொன்ராம்.

ரஜினி முருகன் படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் அப்போது பணக்கஷ்டத்தில் இருந்ததால் படப்பிடிப்பு செலவுக்கு பணம் அனுப்பாமல் கால தாமதம் செய்தது.இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் ரஜினி முருகன் படத்தை ட்ராப் பண்ணும் சூழல் கூட உருவானது.

ஏறக்குறைய இதே மாதிரியான பணப்பிரச்சனை தற்போது இயக்கும் படப்பிடிப்பிலும் தொடர்வதால் செம டென்ஷனில் இருக்கிறாராம் பொன்ராம். அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் இந்த பஞ்சாயத்துகளை கண்டுகொள்ளாமல் கேரவானில் போய் புகுந்து கொள்கிறாராம்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top