சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

100 கோடில படமெடுத்தது குத்தமா? நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த மார்டின் படக்குழு..

துருவ் சார்ஜா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான மார்டின் படத்திற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த விமர்சனங்களுக்கு எதிராக படக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அர்ஜூன் கதையில் மருமகன் துருவ் சார்ஜா ஹீரோ

கன்னட சினிமாவில் மற்றொரு பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ளது மார்டின். நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதை எழுத அவரது சகோதரி மகன் துருவ் சார்ஜா ஹீரோவாக நடித்துள்ள மார்டின். அவருடன் இணைந்து வைபவி சாண்டில்யா, அன்வேசி ஜெயின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ.பி. அர்ஜூன் இயக்கியுள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார். ஜேஜிஎஃப் புகழ் ரவி பசூர் பின்னனி இசையமைத்துள்ளார்.

ரூ.100 பட்ஜெட்டில் மார்டின் படம்

ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கன்னட சினிமாவில் அதிக பட்ஜெட் படமாக கருதப்படும் நிலையில், இப்படத்தின் டீசர், டிரெயிலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின், இப்படம் கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இப்படத்தின் கதை: பட ஆரம்பத்தில் மாஃபியா கும்பலுடன் சண்டை போடும் துருவ் சார்ஜா கடுமையாக தாக்கப்படுகிறார். அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்லும்பொது, ஒரு நபர் அவரது நினைவுகள் அனைத்தையும் அழித்துவிடும்படி கூறுகிறார்.

அதன்பின், துருவ் சார்ஜா பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்படுகிறார். சிலரால் தன் நினைவுகள் அழிக்கப்பட்ட பின், தான் யார் என்று அறிய அவர் முயன்று, அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார். சில நாட்களுக்கு பின் அவரது பெயர் தெரிய, மார்டின் என்ப்வரை பிடிக்கத்தான் பாகிஸ்தானுக்கு வந்தது தகவல் தெரிகிறது. இதையடுத்து தன்னை யார் என்று கண்டுபிடித்தாரா? பாகிஸ்தான் சிறைக்கு எப்படி வந்தார்? அங்கிருந்து மீண்டாரா என்பது படத்தின் கதையாக உள்ளது.

மார்டின் மற்றும் இன்னொரு கதாப்பாத்திரம் துருவ் சார்ஜா நடித்திருந்தாலும், மார்டின் வேடத்தில் ஒவர் பெர்பாமென்ஸ் செய்ததாக விமர்சிக்கப்படுகிறது. அத்துடன் இப்படத்தின் மீது சினிமா விமர்ச்கர்கள் மற்றும் யூடியூபர்கள் கடுமையான விமர்சித்துள்ளனர். பல கோடி வசூல் குவிக்கும் என படக்குழு எதிர்பார்த்திருந்த நிலையில் படம் வெளியாகி இப்படி நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

சட்ட நடவடிக்கை எடுத்த படக்குழு

இந்த நிலையில் சினிமா விமர்சகர்களும், யூடியூபர்களும் மார்டின் படத்திற்கு எதிரான பதிவிட்ட நெகட்டிவ் வீடியோக்களை நீக்க வேண்டுமென படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின், காப்பிரைட் பிரச்சனை உருவாகும் எனக் கருதி யூடியூபர்ஸ் அந்த வீடியோவை நீக்கிவிட்டதாக தெரிகிறது. மேலும், படத்தின் மீதான நியாயமான விமர்சனங்களைத் தாண்டி, வேண்டுமென்று சிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் கூறி வருவதாக படக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் பல கோடி பொருட்செலவில் இப்படத்தை எடுக்கத்துள்ள தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை நெகட்டிவ் விமர்சங்களிலிருந்து காப்பாற்ற ஜான் டோ ஆர்டரை பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அதன்படி, இப்படம் பற்றி அவதூறு, நெகட்டிவ் விமர்சனம் தெரிவிப்பவர்களுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதுதான் ஜான் டோ ஆர்டர். இது விதி மீறல், சட்டவிரோத செயல்களில் அனைவரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சூழலில் இந்த ஜான் டோ உத்தரவு பயன்படுத்தப்படுகிறது. இது இணையதளம், யூடியூப்களின் மீது இந்த நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

நெட்டிசன்கள் விவாதம்

இந்த சம்பவம் கன்னட சினிமா வட்டாரத்திலும், யூடியூப் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவரை ஜான் டோ ஆர்டர் அறிவு சார் சொத்துரிமை, திரைப்படம், இசை ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இது விமர்சனத்திற்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதே சமயம் நியாயமான முறையில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்திருந்தால் இந்த நடவடிக்கையை பல கோடி முதலீடு போட்டு படமெடுத்த மார்டின் படக்குழு ஏன் எடுக்கப் போகிறது? என பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Trending News