நடிகர் அல்லு அர்ஜுனின் டிஜே திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான படம் டிஜே என்ற படம் வசூலில் மகத்தான சாதனை படைத்து வருகிறது. அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே ராவ் ரமேஷ் நடிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது.

இந்நிலையில் இந்தப் படம் ஒரே வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது. அல்லு அர்ஜூனின் படங்களில் அதிவேக வசூல் கண்ட முதல் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. அல்லு அர்ஜூன் படங்களில் ரூ. 100 கோடியைத் தொடும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்பு ரேஸ் குர்ரம், சர்ராய்நோடு ஆகிய படங்கள் ரூ. 100 கோடி வசூலைப் பெற்றுள்ளன. முதல் 7 நாள்களில் டிஜே படம் ரூ. 102 கோடி வசூலை பெற்றுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் முதல் வாரத்தில் ரூ. 50.6 கோடியைப் பெற்றுள்ளது. இம்மாநிலங்களில் முதல் வாரத்தில் விநியோகஸ்தர்களுக்கு 50% லாபத்தை அளித்த நான்காவது படம் இது. ‘டிஜே’ படம் கர்நாடகத்தில் முதல் வாரம் ரூ. 10.5 கோடி வசூலித்துள்ளது. அதேபோல அமெரிக்காவிலும் முதல் வாரம் ரூ. 7 கோடியை தொட்டுள்ளது.