2022-ல் 100 முதல் 500 கோடி வரை வசூல் செய்த 7 படங்கள்.. எதிர்பாராமல் வாரி கொடுத்த லோ பட்ஜெட் மூவிஸ்

2022 ஆம் ஆண்டு கோலிவுட் சினிமாவுக்கு அதிர்ஷ்ட ஆண்டு என்றே சொல்லலாம். இந்த வருடம் நிறைய படங்கள் நல்ல அங்கீகாரத்தை பெற்றன. மேலும் எதிர்பாராத அளவுக்கு வசூலையும் வாரி குவித்தன.

எதற்கும் துணிந்தவன்: சூரரை போற்று, ஜெய் பீம் படங்கள் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை ஓடிடி தளத்தில் வெற்றி பெற்றன. அதன் பின்னர் தியேட்டர் ரிலீஸ் ஆக வெளிவந்த படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை பாண்டி ராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் 100 கோடி வசூலித்தது.

டான்: டாக்டர் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது தான் டான். இந்த படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி முழு நீள நகைச்சுவை படமாக எடுத்திருந்தார். சிவா மற்றும் எஸ் ஜெ சூர்யா கூட்டணியில் வெளியான இந்த படம் 100 கோடி வசூல் செய்தது.

Also Read: ஊருக்கு மட்டும்தான் உபதேசமாம்.. அண்ணனுக்கு உதவாமல் டீலில் விட்ட தனுஷ்

திருச்சிற்றம்பலம்: 10 வருடத்திற்கு முன்னாள் இருந்த தனுஷை அப்படியே கண் முன் காட்டிய படம் திருச்சிற்றம்பலம். யாரடி நீ மோகினி படத்தை இயக்கியிருந்த மித்ரன் ஜவஹர் தான் இந்த படத்தை இயக்கினார். லோ பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடி வசூலித்தது.

பீஸ்ட்: இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய்க்கு ஹாட்ரிக் கூட்டணியாக வெளியான படம் தான் பீஸ்ட். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன் முறையாக நடிகராக அறிமுகமாகியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 150 கோடி வசூல் செய்தது.

வலிமை: நேர் கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் மீண்டும் நடித்த திரைப்படம் வலிமை. இந்த படம் அவ்வளவு பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் 200 கோடி வரை வசூல் செய்தது.

Also Read: அட்லிகாக விஜய் செய்த உதவி.. நடிகைக்கு அடித்த பம்பர் பிரைஸ்

விக்ரம்: உலக நாயகன் கமலஹாசனுக்கு நீண்ட வருடத்திற்கு பிறகு அமைந்த மிகப்பெரிய வெற்றி படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றது. இந்த படம் 400 கோடி வசூலித்தது.

பொன்னியின் செல்வன்: கோலிவுட் ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் புதினமான பொன்னியின் செல்வன் இலக்கியத்தை படமாக இயக்கிய மணிரத்னத்திற்கு இது ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படம் 500 கோடி வசூல் செய்தது.

Also Read: பீதியைக் கிளப்பிய வலிமை, பீஸ்ட்.. வாரிசு படத்தால் திருப்தி அடையாத விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்