Connect with us

Cinemapettai

இன்றுடன் 10 வருடங்கள் கடந்த இலங்கை இனப்படுகொலை..! தற்போது LTTE உதவியை நாடும் அரசு.. பிரபாகரனின் வெற்றி

srilanka

India | இந்தியா

இன்றுடன் 10 வருடங்கள் கடந்த இலங்கை இனப்படுகொலை..! தற்போது LTTE உதவியை நாடும் அரசு.. பிரபாகரனின் வெற்றி

தமிழர் இனப்படுகொலை நடந்து இன்றுடன் 10 வருடங்கள் ஆகிவிட்டது. ராஜபக்சேயின் கொடூர இராணுவ ஆட்சியில்  தமிழினத்தின் தலைவனான பிரபாகரன் அளிக்கப்பட்டதும் இல்லாமல் அந்த இனமும் கொடூரமாக கொல்லப்பட்டது.

இதற்கு இலங்கையைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் மிக முக்கிய காரணம் என்று ஐநா சபையில் பல சமூக ஆர்வலர்கள் போராடினார்கள்.மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத சிங்கள அரசு.

மக்கள் மீது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும்.

srilanka

srilanka

இந்த இனப்படுகொலைக்கு அன்று ஆட்சியிலிருந்த மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தமிழ் மக்களின் கோபம் இன்னும் அதிகரித்து  வெறுப்பாக மாறியது.

தமிழினத்தை அழிக்கும் ஒரு உத்தியாக போர் நடந்து கொண்டிருக்கும் போது  தாய்மை அடைந்தவர்களின் கரு கலைக்கப்பட்டது. இந்த கொடூரமான தமிழினத்தை அழித்த சிங்கள ராணுவம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அது என்னவென்றால்  சற்று தினங்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பில் பல கிறிஸ்தவர்கள்  கொல்லப்பட்டனர் இதற்கு ஒரு முஸ்லிம் அமைப்பு பொறுப்பேற்றது.

இது கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற ஒரு படுகொலை என்றே கூறலாம்.  அந்த சமயத்தில் சிங்கள அரசு LTTE உதவியை நாடி உள்ளது.

srilanka

srilanka

அதில் இருக்கும் ஒரு சில தலைவர்கள் இன்னும் உலக அளவில் உள்ள தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதால் தகவல்களை  தருகிறோம் என்று சிங்கள அரசுக்கு கூறியுள்ளது.

இதுவே தலைவர் பிரபாகரனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறலாம். ஒரு இனம் அழிந்தால் தான் மற்றொரு இனம் வாழும் என்பது காட்டில் வாழும் மிருகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது அல்ல.

இந்தப் பத்து வருடங்களை கடந்து நிற்கும் தமிழினம் மீண்டும் ஒரு தமிழனை தலைவனாக ஏற்கும் அந்த நாளில் இலங்கைக்கு பதில் அளிக்க காத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் நடைபெறும் என்பதே இந்தியாவில் வாழும்  தமிழர்களின் தலைமுறைகளின் கனவுகள் ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top