fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி !

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி !

மதன் கார்க்கி

கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர். 2001-ஆம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்பு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமல்லாது பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் மெல்லினம் என்ற கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

இந்நிலையில் இவர் தான் மே 21 உடன் சினிமா உலகில் நுழைந்து பத்து வருடங்கள் ஆகி விட்டதாக தன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

“மே 21. அண்ணா பல்கலை கழக விளையாட்டு திடலில் அமர்ந்து
என் முதல் பாடலான எந்திரனின் இரும்பிலே ஓர் இருதயம் பாடலை எழுதினேன். உங்களின் அன்பு, ஆசி, வழிகாட்டுதலால் தான் இது நிகழ்ந்தது. அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

250 படங்கள், 750 பாடல்கள். பாடலாசிரியராக மட்டுமில்லாமல், பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார் மதன் கார்க்கி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top