தற்போது அனைத்து மக்களிடம் ஸ்மார்ட்போன் உள்ளது. மேலும் மனிதன் தினசரி வாழ்க்கையில் அதிகப்பயன்பாடு உள்ளவகையில் இடம்பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அவ்வாறு மக்களுக்கு பயன்படும் ஸ்மார்ட்போன்களில் பல நன்மை தீமைகள் அதிகமாக உள்ளன. மேலும் அனைத்து செயல்பாட்டு திறன்களைக் கொண்டு ஸ்மார்ட்போனக்ள் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் :

ஸ்மார்ட்போன் என்றாலே அனைத்து மக்களும் விரும்பும்வண்ணம் பல மென்பொருள் தொழில்நுட்பங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேலும் முதலில் வந்த அழைப்பேசி பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டன. தற்போது மனிதனின் அன்றாடவேலைக்கு இந்த ஸ்மார்ட்போன் உபயோகமாக உள்ளது.

ஸ்மார்ட்போன் இயக்கம்:

ஸ்மார்ட்போன இயக்குவதற்க்கு மிக எளிமையாக இருக்கும். மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களைக்கொண்டு செயல்படுவதால் இதன் வேகம் மிக அருமையாக இருக்கும். ஸ்மார்ட்போன்கள் பொருத்தவரை போட்டோ மற்றும் விடியோ போன்றவை மிகத்துள்ளியமாக வரும் திறன் கொன்டவை

ஸ்மார்ட்போன் பயன்பாடுகள்:

ஸ்மார்ட்போன் பொருத்தவரை மக்களுக்கு அதிகமா பயன்படுகிறது அவை வங்கிக் கணக்கு செயல்பாட்டிற்கு பயன்படுகிறது, வாகன ஓட்டுநர்களுக்கு வழிகாட்டியாக பயன்படுகிறது, மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பயன்படுகிறது. இது போன்ற பல்வேறு பயன்பாட்டிற்கு உபயோகமாக உள்ளன இந்த ஸ்மார்ட்போன்கள்.
பேட்டரி அதிக சூடானால் வெடிக்கும் :

ஸ்மார்ட்போன்கள்களை அதிக நேரம் இன்டெர்நெட்டில் பயன்படுத்துவதால் பேட்டரி மிகவும் சூடாகி மிகப் பெரிய அபாயத்தை ஏறப்படுத்தும். எனவே குறைந்தநேரம் இன்டெர்நெட் பயன்படுத்துவது நல்லது.

ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு:

ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு பொருத்தமாட்டில் பல்வேறு பாதிப்புகள் வந்துசேரும். மேலும் பல ஆய்வில் ஸ்மார்ட்போன்க்கு வரும் கதிர்வீச்சினால் அதிகப்படியான மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்மார்ட்போன் கவனம் சிதறல்:

சில மனிதர்கள் போன் பேசிக் கொண்டே நடக்கின்றனர் அவ்வாறு நடக்கும் போது கவனம் சிதறி கிழே விழும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் பல இன்டெர்நெட் இயக்கங்களுக்குப் பயன்படுகிறது இதனால் அவற்றில் கவனம் செலுத்தி நடக்கும் போது கிழே விழும் நிலமை உள்ளது.

திரையரங்கில் ஸ்மார்ட்போன் :

பல்வேறு திரையரங்கில் மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் அதன்பக்கம் கவனம்திரும்பி திரைப்படத்தை பார்க்க முடியாதவண்ணம் ஏற்ப்டுகிறது. பெரும்பாலும் வலைதலங்களைப் பயன்படுத்துவதினாலே இந்த சிக்கல் வருகிறது.

செல்பீ:

அதிக மக்கள் பொது இடங்களில் ஸ்மார்ட்போன் மூலம் செல்பீ எடுக்கின்றனர். மேலும் சாலையை கடக்கும் போது செல்பீ எடுத்தால் விபத்து அபாயம் வந்து சேரும்.

ஸ்மார்ட்போன் பேட்டரி அபாயம்:

முக்கியமான நேரத்தில் மற்றும் இடங்களில் உங்களது ஸ்மார்ட்போன் பேட்டரிகள் தீர்ந்தால் அதன் மீது மிகப்பெரிய கோபம் வருகிறது.இதனால் பல விளைவுகள் ஏறப்படும் நிலமை உள்ளது.

ஸ்மார்ட்போன் தீ பற்றும்:

மேலும் வீட்டில் உள்ள தலையனை மீது வைத்து செல்போன்களை சார்ஜ் செய்தால் தீ பற்றும் ஆபாயம் உள்ளது. இதனால் மேசைப் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

தண்ணீரில் ஸ்மார்ட்போன்:

சில ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்தால் எந்தவித சேதம் வராது. ஆனால் பல ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்தால் அவற்றை உபயோகப்படுத்த முடியாது. எனவே ஸ்மார்ட்போன்களை கவனமாக வைத்திருக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்கள் பக்கவிளைவு:

தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் ஸ்மார்ட்போன்கள் உபயோகிக்கின்றனர். ஸ்மார்ட்போன்கள் பொருத்தமாட்டில் பலவேறு விபத்துகள் நடந்துள்ளன. சென்னையை சார்ந்த ஒரு சிறுவன் போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியுள்ளனான் அப்போது அந்த ஸ்மார்ட்போன் வெடித்ததில் அந்த சிறுவனின் முகத்தில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. இது போன்று பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் ஏற்ப்பட்டுள்ளது.எனவே இந்த மாதிரி விபத்துகளை தடுக்க நாம் பாதுகாப்பாக ஸ்மார்ட்போன்கள்களை உபயோகிக்க வேண்டும்.