fbpx
Connect with us

கமல்ஹாசன் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்!

kamalhaasan

News / செய்திகள்

கமல்ஹாசன் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்!

கமல் என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதிய நுட்பம் கதையிலோ, நடிப்பிலோ, தொழில்நுட்ப ரீதியிலோ புதுமையாக இருக்கும்.

உனக்கு பிடித்த வேலையை செய்தால் நீ அதில் சிறந்து வருவாய் என்பது கமலின் கூற்று. அதற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டியவர் கமல். பல கான்ட்ரவர்ஸிகளை கடந்து வந்த கலைஞன். தமிழில், கலையில் கர்வம் கொண்ட இந்த மேதை தன் கருத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதுமில்லை. மாற்றிக் கொள்வதுமில்லை.1. தான் நடித்த முதல் படத்திற்கே ஜனாதிபதி கையால் தங்க பதக்கம் வென்றவர் கமல். அப்போது கமலின் வயது நான்கு.

2. 18 வயதில் ஸ்க்ரிப்ட் எழுதியவர் கமல். உணர்சிகள் என்ற கதையை அப்போது அவர் எழுதியிருந்தார். இது ஒரு விலைமாதுவை காப்பற்றி அவர் மீது காதல் கொள்வது போன்ற கதையாகும்.

3. இரண்டு அல்லது மூன்று மொழிகளில் எடுக்கப்படும் படங்களில் சில நடிகர்கள் நடிப்பதை, நடித்ததை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஒரு நடிகர், இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம், பெங்காலி என பல மொழி படங்களில் நடித்தே ஒரே நடிகர் கமல்.

4. உலகம் வியக்கும் இயக்குனரான க்வென்டின் டரான்டினோ, கமலை கண்டு உத்வேகம் அடைந்ததாக கூறியுள்ளார். ஆளவந்தான் படத்தை பார்த்து தன் கில்பில் அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியதாக க்வென்டின் டரான்டினோ கூறியுள்ளார்.

5. இந்தியாவில் அதிக முறை ஆஸ்கருக்கு தேர்வான படங்கள் கமலுடையது தான். இதனால் தான் இவரை அனைவரும் ஆஸ்கார் நாயகன் என அழைக்கின்றனர்.

6. கமலின் கனவு படமான, மருதநாயகம் இரண்டாம் எலிசபெத் ராணியால் துவக்கப்பட்டது. கமலின் சிறந்த படைப்பாக திகழ வேண்டிய மருதநாயம் இன்று வரை முடிவிலியாக இருப்பது சற்று வருத்தம் அளிப்பது தான்.

7. தன் இயக்கம் மூலம் பல நல்ல உதவிகள் செய்து வருபவர் கமல். அதில் குறிப்பிடத்தக்கது, இவரது இயக்கம் மூலம் தானம் செய்யப்பட்ட 10,000 ஜோடி கண்கள் ஆகும்.

8. முதல் முதலாக ஒரு கோடி ஊதியம் வாங்கிய நடிகர் கமல். இந்தியாவில் ராஜேஷ் கண்ணா, அமிதாப்பச்சனுக்கு பிறகு இவர் தான் ஒரு கோடி சம்பளம் வாங்கியதாக அறியப்படுகிறது.

9. அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு வேடத்தில் குட்டை கமல் வேடத்தை எப்படி எடுத்தார் கமல் என்பது இன்று வரை புரியாத புதிராக தான் இருக்கிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top